சொத்துக்காக தந்தையை சுட்டுக் கொன்ற மகன் நிகில்

 
இந்தியா

உ.பி.யில் ரூ.150 கோடி சொத்துக்காக தந்தையை சுட்டுக் கொன்ற மகன்

செய்திப்பிரிவு

காசியாபாத்: உத்​தரப் பிரதேச மாநிலம் காசி​யா​பாத் மோடிநகர் பகுதி​யைச் சேர்ந்​தவர் ஹரி ஓம் சவுத்ரி (55). செல்​வாக்​கு மிக்க விவ​சா​யி​யான இவருக்​கு, டெல்​லி- மீரட் விரைவுச்​சாலை அருகே 75 பிகா நிலம் மற்​றும் வணிக வளாகக் கடைகள் என சுமார் ரூ.150 கோடி மதிப்​பிலான சொத்​துகள் உள்​ளன.

இவருக்கு மனைவி அனிதா, நிகில், நீஷூ என்ற மகன்​கள் உள்ளனர். இவரது மூத்த மகன் நிகில் (32) மதுப் பழக்​கத்​துக்கு அடிமை​யானவர். ஏற்​கெனவே நிகிலுக்கு சில கடைகளை​யும் 25 பிகா நிலத்​தை​யும் ஹரிஓம் கொடுத்​திருந்​தார்.

தனது பெயருக்கு பங்கை உடனே சட்​டப்​படி மாற்​றித் தரு​மாறு நிகில் தொடர்ந்து வற்​புறுத்தி வந்​துள்​ளார். ஆனால், மதுப் பழக்கத்​தால் சொத்​துகளை நிகில் அழித்​து​விடு​வார் எனக் கூறி, சொத்து மாற்​றப் பத்​திரங்​களை எழு​திக் கொடுக்க ஹரி ஓம் மறுத்து வந்​துள்​ளார். இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு நிகில் போதை​யில் வீட்​டுக்கு வந்​துள்​ளார்.

அப்போது, தந்தைக்கும் மகனுக்கும் வாக்​கு​வாதம் முற்​றியது. இதில் ஆத்​திரமடைந்த நிகில், தனது தாயின் கண் எதிரே துப்பாக்கியை எடுத்து தந்​தையை நோக்கி சரமாரி​யாகச் சுட்​டார். முகம், மார்பு மற்​றும் வயிற்​றுப் பகு​தி​யில் 3 குண்​டு​கள் பாய்ந்ததில் ஹரிஓம் உயிரிழந்தார்.

போலீ​ஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறை​வாக உள்ள நிகிலைத் தேட 5 தனிப்​படை அமைத்​துள்​ளனர். மேலும், 2018-ம் ஆண்​டிலும் குடும்​பத் தகராறில் தனது தம்பி நீஷுவை நிகில் துப்பாக்​கி​யால் சுட்​டுக் காயப்​படுத்​திய சம்​பவ​மும் தற்​போது போலீஸ்​ வி​சா​ரணை​யில்​ தெரிய​ வந்​துள்​ளது.

SCROLL FOR NEXT