இந்தியா

“சிலர் ‘ஜென் ஸி’-ஐ தவறாக வழிநடத்த முயன்றனர்” - ராஜினாமா குறித்து தர்மேந்திர பிரதான் கருத்து

மோகன் கணபதி

புதுடெல்லி: சிலர் ஜென் ஸி-ஐ தவறாக வழிநடத்த முயன்றதாக முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டியுள்ளார். பதவி விலகலுக்குப் பிறகு முதல்முறையாக மாணவர்கள் போராட்டம் குறித்தும் தனது ராஜினமா குறித்தும் அவர் பேசியுள்ளார்.

சாம்பல்பூர் எம்பியான தர்மேந்திர பிரதான், பத்ம விருது பெற்றவர்களுக்காக சாம்பல்பூரில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “ஜென் ஸியினரின் தாக்கத்துக்கு நான் ஆளானேன். இந்த விவகாரம் நடந்த விதத்தைப் பார்க்கும்போது, புதிய தலைமுறை இளைஞர்களை சிலர் தவறாக வழிநடத்த முயன்றதாக எனக்குத் தோன்றியது.

நான் பிரதமரைச் சந்தித்து ஜென் ஸி விருப்பத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன். அவர்கள் முன்னிலையில் நான் இதை தெரிவிக்க அனுமதிக்குமாறு அவரிடம் கோரினேன். ஏனெனில், இதில் நான் எனது தனிப்பட்ட கவுரவத்தை ஒருபோதும் முன்னிறுத்தவில்லை. பின்னர், அவரே இது குறித்துப் பேசினார்” என தெரிவித்தார்.

தர்மேந்திர பிரதான் தனது ராஜினாமா கடிதத்தில், “தேசவிரோத சக்திகள் இந்த போராட்டத்தைப் பயன்படுத்திக்கொள்வதைத் தடுக்கவும், நாட்டின் ஒற்றுமையைக் காக்கவும், மாணவர்களின் எதிர்காலம் சட்டச் சிக்கலில் சிக்கிக்கொள்ளாமல் இருக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது” எனன குறிப்பிட்டிருந்தார். இது தனக்கு தனிப்பட்ட கவுரவம் சார்ந்த விஷயம் அல்ல என்றும் அவர் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT