இந்தியா

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: குழந்​தைகளுக்கு எதி​ரான பாலியல் சுரண்​டல் தொடர்​பான உள்​ளடக்​கங்​கள் குறித்​து, சமூக வலை​தளங்​கள் கட்​டா​யம் புகாரளிப்​ப​தற்​கான வழி​காட்டு நடை​முறை​களை செயல்​படுத்த உத்​தர​விடக் கோரிய மனுவுக்​கு, மத்​திய அரசு பதிலளிக்க உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

குழந்​தைகளுக்​கான நீதி உரிமை​கள் கூட்​டமைப்பு சார்​பில், உச்ச நீதி​மன்​றத்​தில் ஒரு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. அந்த மனு​வில், "போக்சோ சட்​டம் மற்​றும் அதன் கீழ் வகுக்​கப்​பட்ட விதி​களின்​படி, குழந்​தைகளின் ஆபாச படங்​கள், அவர்​களுக்கு எதி​ரான பாலியல் சுரண்​டல்​கள் கொண்ட உள்​ளடக்​கங்​கள் குறித்து சமூக வலை​தளங்​கள் கட்​டாய​மாகப் புகாரளிக்க வேண்​டும். குறிப்​பாக, சிறார்​களுக்​கான சிறப்பு காவல் பிரிவுக்கோ அல்​லது உள்​ளூர் காவல் துறை​யினரிடமோ புகாரளிக்க வேண்​டுமென்​று, உச்ச நீதி​மன்​றம் கடந்த 2024-ல் தீர்ப்​பளித்​தது.

ஆனால், 2 ஆண்​டு​கள் ஆகி​யும், அந்​தத் தீர்ப்பு உரிய முறை​யில் நடை​முறைப்​படுத்​தப்பட வில்​லை. எனவே, குழந்​தைகளுக்கு எதி​ரான பாலியல் சுரண்​டல் உள்​ளடக்​கம் குறித்து புகார் அளிக்​கத் தவறும் சமூக வலை​தளங்​களுக்கு எதி​ராக குற்​ற​வியல் நடவடிக்​கைகள் எடுக்​க வேண்​டும்" என்று கோரப்​பட்​டுள்​ளது.

மேலும், குழந்​தைகளுக்கு எதி​ரான பாலியல் சுரண்​டல், கட்​டாய​மாக புகாரளித்​தல், மின்​னணு ஆதா​ரங்​களைப் பாது​காத்​தல், விசா​ரணை முகமை​களுக்கு இடையே ஒருங்​கிணைப்பு ஏற்​படுத்​துதல் ஆகிய​வற்றை உள்​ளடக்கி ஒரு வழி​காட்டு நெறி​முறை​களை வகுக்க வேண்​டும் எனவும் அதில் கோரப்​பட்​டுள்​ளது.

அந்த மனு, உச்ச நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​கள் ஜெ.பி.பர்​தி​வாலா மற்​றும் வினோத் சந்​திரன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, மனுவை பரிசீலித்த நீதிப​தி​கள், இது தொடர்​பாக மத்​திய அரசு பதிலளிக்க நோட்​டீஸ்​ பிறப்​பித்​து உத்​தர​விட்​டனர்​.

SCROLL FOR NEXT