மோப்ப நாய் ‘டைசன்'

 
இந்தியா

காஷ்மீரில் தீவிரவாதிகளின் மறைவிடத்தைக் காட்டிய மோப்ப நாய் ‘டைசன்'

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜம்​மு​வின் கீஷ்த்​வார் பகு​தி​யில் நேற்று முன்​தினம், மத்​தி​யப் பாது​காப்​புப் படை​யினர் ரோந்து பணி​யில் ஈடு​பட்​டனர்.

அப்​போது அவர்​களு​டன் இருந்த டைசன் என்ற மோப்ப நாய், தீவிரவா​தி​களின் இருப்​பிடத்தை நோக்கி குரைத்​துள்​ளது. இதையடுத்​து, டைசனை தீவிர​வா​தி​கள் துப்​பாக்​கி​யால் சுட்டுள்ளனர். காலில் குண்டு பட்டு ரத்​தம் கொட்​டிய​போதும் டைசன் தொடர்ந்து குரைத்​துள்​ளது. இதையடுத்து பாதுகாப்புப்படை​யினர் தொடங்​கிய நடவடிக்​கை​யில் 3 தீவிரவாதி​களும் சுட்டு வீழ்த்​தப்​பட்​டனர்.

தீவிர​வா​தி​களின் மறை​விடத்​தைக் கண்​டு​பிடித்த ஜெர்​மன் ஷெப்பர்ட் நாயான டைசன், இந்த நடவடிக்​கை​யின் நாயக​னாகக் கருதப்​படு​கிறது. இந்​நிலை​யில், காயமடைந்த டைசனுக்கு உதம்​பூரில் உள்ள ஒரு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. டைசனைப் போல், பல மோப்ப நாய்​கள் தீவிரவா​தி​களை அடை​யாளம் காண்​ப​தில் உதவி உள்​ளன.

          

கடந்த 2024-ம் ஆண்​டில் காஷ்மீரின் அக்​னூர் செக்​டரில் ’பாண்​டம்' எனும் மோப்ப நாய் காணா​மல் போனது. 4 தினங்​களுக்கு பின் திரும்​பியப் பாண்​டம், தீவிர​வா​தி​களின் மறை​விடத்​தைக் கண்​டு​பிடித்​தது. பிறகு அங்கு பாது​காப்​புப் படை​யினர் சென்று தீவிரவாதி​களைக் சுட்டு வீழ்த்​தினர்.

எனினும், கடந்த அக். 28, 2024-ல் நடை​பெற்ற துப்​பாக்​கிச் சண்டையின்​போது பாண்​டம் தீவிர​வா​தி​களால் சுட்​டுக் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்​தது. இது​போல், வீர மரணம் அடை​யும் மோப்ப நாய்​களின் உடல்​கள் அரசு மரி​யாதை​யுடன் அடக்​கம் செய்​யப்​படு​கின்​றன. இத்​துடன், அவை​களின் வீர தீர செயல்​களைப் பாராட்​டும் வகை​யில் விருதுகளும் வழங்கப்படுகின்​றன.

தீவிரவாதிகள் பிடிபட்டது எப்படி? - காஷ்மீர் பாது​காப்​புப் படையினர் கூறிய​தாவது: ஜம்மு காஷ்மீரில் 5 ஆண்​டு​களுக்கு முன்பு ஜெய்​ஷ்-இ-​முகமது அமைப்​பைச் சேர்ந்த சீனியர் கமாண்டர் சைபுல்லா ஊடுரு​வி​னார். இவரது தலை​மை​யில் 7 தீவிர​வா​தி​கள் சத்ரூ வனப்​பகு​தி​யில் பதுங்​கி​யிருந்து தீவிர​வாத நடவடிக்​கைகளை மேற்​கொண்​டனர். காஷ்மீரில் நடை​பெற்ற பல தீவிர​வாத தாக்​குதலில் இவர்​களுக்​குத் தொடர்பு உள்​ளது.

இவர்​களைப் பிடிக்க ராணுவத்​தின் தனிப்​படை பிரி​வினர், மத்​திய ரிசர்வ் போலீஸ் படை​யினர், உளவுப் பிரி​வினர், காஷ்மீர் போலீஸார் ஆகியோர் இணைந்து கடந்த 326 நாட்​களாக கிஷ்த்வார் மாவட்​டத்​தில் உள்ள சத்ரூ பனிப் மலைப் பகு​தி​யில் தொடர்ந்து தேடு​தல் வேட்டை நடத்​தினர். உள்​ளூர் மக்​கள் தீவிர​வா​தி​களுக்கு அளித்த ஆதரவு காரண​மாக இவர்​களை எளி​தில் பிடிக்க முடிய​வில்​லை.

சைபுல்லா கூட்​டாளி​கள் 4 பேரை சுட்​டுக் கொன்ற நிலை​யில் சைபுல்லா உட்பட 3 பேர் மட்​டும் பிடிப​டா​மல் நீண்ட கால​மாக தப்பி வந்​தனர். இந்​நிலை​யில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேடு​தல் வேட்​டை​யில் சைபுல்லா உட்பட 3 பேரும் சுட்டுக் கொல்​லப்​பட்​டனர்.

பாது​காப்பு படை​யினர் கூட்டு முயற்​சி, டைசன் மோப்ப நாய், ட்ரோன்​கள், செயற்​கைக்கோள் படங்​கள் மற்​றும் நவீன கருவிகளின் உதவி​யுடன் சைபுல்லா தலை​மையி​லான 7 தீவிரவாதி​களை சுட்​டுக் கொல்ல மொத்தம் 326 நாட்​கள் ஆனது. இவ்​வாறு பாது​காப்​புப் படை​யினர் தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT