இந்தியா

இருமுறை மரணத்தை வென்ற ஸ்மித் மச்சார்: மூத்த நரம்பியல் மருத்துவர்கள் தகவல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த செப்​டம்​பர் 30-ம் தேதி ஐக்​கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு ஃபிளை துபாய் விமானம் புறப்​பட்​டது. இதில் 180 பேர் பயணம் செய்​தனர். இந்திய பைலட் ஸ்மித் மச்சார், ஓமனை சேர்ந்த துணை பைலட் ஹமாம் அல் ஹமாமி விமானத்தை இயக்​கினர்.

அப்போது, விமானத்தை தரையில் மோத திட்டமிட்ட ஹமாம் அல் ஹமாமி, நடுவானில் ஸ்மித் மச்சாரை கோடாரியால் தாக்கினார். இதில் நிலைகுலைந்த ஸ்​மித் மச்​சார், சிரமப்பட்டு காக்​பிட் அறைக் கதவை திறந்​தார். இதனால் சதி முறியடிக்​கப்​பட்​டது. படுகாயமடைந்த ஸ்மித் உடல்​நலம் தேறி துபாயில் உள்ள தனது வீட்​டுக்கு திரும்பி உள்​ளார். அவரது பின்​னந்​தலை​யில் உள்ள அறுவைச் சிகிச்சை தழும்​பு​கள் தெளிவாக தெரிகிறது.

இது​குறித்து அமெரிக்​காவை சேர்ந்த மூத்த நரம்​பியல் மருத்​து​வர் தீட்​சித் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், "பைலட் ஸ்​மித் மச்​சா​ரின் மண்டை ஓடு உடைந்து மிக மோச​மான பாதிப்​பு​கள் ஏற்​பட்​டிருக்​கிறது. அறு​வைச் சிகிச்சை காயங்​களை பார்க்​கும்​போது இதயம், மூளைக்கு ரத்​தத்தை கொண்டு செல்​லும் மிகப்​பெரிய நரம்பு வெட்​டுப்​பட்​டிருக்​கக்​கூடும். மருத்​து​வர்​கள் மிகுந்த சிரமப்​பட்டு பைலட் மச்​சா​ருக்கு அறு​வைச் சிகிச்சை செய்து உள்ளனர்".

டெல்​லியை சேர்ந்த மூத்த நரம்​பியல் மருத்​து​வர் ராகுல் சாவ்லா கூறும்​போது, “பைலட் மச்​சா​ரின் மண்டை ஓடு உடைந்து மூளை பகுதி​யில் ரத்​தக் கசிவு ஏற்​பட்​டிருக்க அதிக வாய்ப்பு உள்​ளது. அவருக்கு சிக்​கலான அறு​வைச் சிகிச்​சைகள் நடை​பெற்​றிருக்​கக்​கூடும்” என்றார்.

மூத்த மருத்​து​வர்​கள் கூறும்​போது, “விமானத்​தில் துணை பைலட் ஹமாமி​யின் கொடூர தாக்​குதலில் பைலட் ஸ்​மித் மச்​சார் உயிர் பிழைத்​தது மிகப்​பெரிய அதிசயம். அவருக்கு நடத்​தப்​பட்ட சிக்கலான அறு​வைச் சிகிச்​சையில் அவர் உயிர் பிழைத்​தது மற்றொரு அதிசய​மாகும். இரு​முறை அவர் மரணத்தை வென்று உயிர் பிழைத்​திருக்​கிறார்” என்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT