இந்தியா

தெலங்கானாவில் 6 பேர் படுகொலை - போக்சோ வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காத எஸ்ஐ சஸ்பெண்ட்

வெற்றி மயிலோன்

ஹைதராபாத்: தெலங்கானாவில் போக்சோ வழக்கில் ஜாமீனில் வெளிவந்த நபர் ஆறு பேரை படுகொலை செய்த விவகாரத்தில், போக்சோ வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காத ஷாபாத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தெலங்​கானா மாநிலம், ரங்​காரெட்டி ஷாபாத் அருகே வசிக்​கும் மைனர் பெண் (17) ஒரு​வருக்​கு, தெய்​வாலகூடா பகு​தி​யைச் சேர்ந்த ராஜ்கு​மார் (38) என்​பவர், பாலியல் தொல்லை கொடுத்​துள்ளார். அதன் அடிப்​படை​யில், போலீ​ஸார் விசா​ரணை நடத்தி கடந்த மே மாதம் ராஜ்கு​மாரை போக்சோ சட்​டத்​தின் கீழ் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

இந்​நிலை​யில், கடந்த வெள்​ளிக்​கிழமை ஜாமீனில் ராஜ்கு​மார் வெளியே வந்​தார். அன்று இரவே தன் மீது புகார் அளித்த மைனர் பெண்​ணின் வீட்​டுக்கு சென்​று, அந்தப் பெண்​ணின் தாய் லட்​சுமி​, பாட்டி ருக்​கம்​மாவை​ சரமாரி​யாகக் கத்​தி​யால் வெட்​டி​னார். பின்​னர் அந்த மைனர் பெண்ணை அகில் சாகர் ஏரிக்​கரை அருகே கொண்டு சென்று அவரை​யும் படு​கொலை செய்​துள்​ளார்.

அதன் பின்​னர், நேராக தனது வீட்​டுக்கு சென்ற ராஜ்கு​மார், அங்​கிருந்த தனது மனைவி சரிதா (33), மகன்​கள் பரிக் ஷித் (4), தைவீக் ஷி (2) ஆகிய மூவரை​யும் கத்​தி​யால் சரமாரி​யாக வெட்​டிக் கொலை செய்​துவிட்டு தலைமறைவாக உள்ளார்.

போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர், ஷாபாத் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்த உடனேயே ராஜ் குமாரைக் கைது செய்யவில்லை என்றும், அவர்களின் அலட்சியமே ஆறு பேர் கொடூரமாகக் கொல்லப்படக் காரணம் என்றும் குற்றம் சாட்டினர். இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இவ்வழக்கை விசாரித்து வந்த உதவி ஆய்வாளர் டி.ரமேஷைப் பணி இடைநீக்கம் செய்தும், ஷாபாத் காவல் ஆய்வாளர் பி. காந்தா ரெட்டிக்கு மெமோ அனுப்பியும் ஃபியூச்சர் சிட்டி காவல் ஆணையர் தருண் ஜோஷி உத்தரவிட்டார்.

6 கொலைகளை செய்த ராஜ்குமாரை உடனடியாகக் கைது செய்யக் கோரி, ஷாபாத் காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள சாலையில் சிறுமியின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமியையும் அவரது தாயாரையும் துன்புறுத்துவதாக மிரட்டிய குற்றவாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருந்தும், காவல் துறையினர் அவரை உடனடியாகக் கைது செய்யவில்லை என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

"நாங்கள் எங்கள் புகார் குறித்து காவல் துறையினரிடம் வலியுறுத்தி வந்தோம். ராஜ்குமார் தலைமறைவாக இருப்பதாகவே போலீசார் கூறி வந்தனர். ஆனால், அவர் நகரில் சுதந்திரமாக நடமாடுவதை நாங்கள் பார்த்தோம். காவல் துறையினர் தங்கள் கடமையைச் சரியாகச் செய்திருந்தால், இந்தச் சம்பவம் நடந்திருக்காது" என்று கொல்லப்பட்ட சிறுமியின் மாமா கூறினார். மேலும், ஒரு வருடத்திற்கு முன்பு சிறுமியின் தந்தை இறந்ததற்கும் ராஜ்குமார் தான் காரணம் என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். ஆனால், உடல்நலக்குறைவு காரணமாகவே அவர் இறந்தார் என்று காவல் துறை தெரிவித்தது.

SCROLL FOR NEXT