இந்தியா

எஸ்ஐஆர் உறு​தி​மொழி, படிவம் 6 தனித்​தனி​யாக பிரிப்பு: தேர்தல் ஆணையத்தின் இசிஐநெட் இணையத்​தில் அமலுக்கு வந்தது

செய்திப்பிரிவு

புதுடெல்லி: எஸ்ஐஆர் உறு​தி​மொழி மற்​றும் படிவம் 6 தனித்தனியாக பிரிக்​கப்​பட்டு உள்​ளன. இது தேர்தல் ஆணையத்தின் இசிஐநெட் இணை​யத்​தில் அமலுக்கு வந்​துள்​ளது.

புதிய வாக்​காளர் பெயரை பட்​டியலில் சேர்ப்​ப​தற்கு படிவம் 6-ஐ சமர்ப்​பிக்க வேண்​டும். இந்​தப் படிவத்​தின் மூலம் விண்ணப்பதாரரின் பெயர், பிறந்த தேதி, முகவரி உள்​ளிட்ட விவரங்​கள் சேகரிக்​கப்​படு​கின்​றன. விண்​ணப்​ப​தா​ரரின் பெற்றோரின் பெயர்​கள் வாக்​காளர் பட்​டியலில் இடம்பெற்றுள்ளதா என்​பது குறித்த தகவல்​களும் கோரப்படுகின்றன.

வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​யின்​போது (எஸ்ஐஆர்) படிவம் 6-ல் திருத்​தம் செய்​யப்​பட்​டது. இதன்​படி கடந்த 2003-ம் ஆண்டு எஸ்​ஐஆர் பட்​டியலில் வாக்​காளர் பெயர் இடம்​பெற்​றிருக்​கிறதா அல்​லது அவரது தாய், தந்​தை​யின் பெயர் இடம்​பெற்​றிருக்​கிறதா என்​ப​தைக் குறிப்​பிட வேண்​டும்.

எஸ்​ஐஆர் ஆன்​லைன் பதிவேற்​றத்​தின்​போது இந்த பகு​தி​யைப் பூர்த்தி செய்​தால் மட்​டுமே அடுத்த நிலைக்​குச் செல்ல முடி​யும் என்ற சூழல் இருந்​தது. இந்​தப் புதிய நடை​முறைக்கு தேர்​தல் ஆணை​யர்​கள் சுக்​பீர் சாந்​து, விவேக் ஜோஷி ஆட்​சேபம் எழுப்​பிய​தாகக் கூறப்​படு​கிறது.

இதுதொடர்பாக எதிர்க்​கட்​சிகள் தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றன. எஸ்​ஐஆர் பணியை ரத்து செய்​யக் கோரி உச்ச நீதி​மன்​றத்​தி​லும் வழக்கு தொடரப்​பட்டு உள்​ளது. இந்த வழக்கு தொடர்​பாக தேர்​தல் ஆணை​யம் சார்​பில் அண்​மை​யில் பிர​மாண பத்​திரம் தாக்​கல் செய்​யப்​பட்​டது. அதில், ஆன்​லைன் பதிவேற்றத்தில் படிவம் 6, எஸ்​ஐஆர் உறு​தி​மொழி தனித்​தனி​யாக பிரிக்​கப்​படும் என்று தெரிவிக்​கப்​பட்​டது.

இந்த நடை​முறை தேர்​தல் ஆணை​யத்​தின் இசிஐநெட் இணையத்தில் நேற்று அமலுக்கு வந்​தது. இதுகுறித்து தேர்​தல் ஆணைய வட்​டாரங்​கள் கூறும்​போது, “படிவம் 6 மற்​றும் எஸ்​ஐஆர் உறு​தி​மொழி படிவம் ஆகியவை ஒரே ஓடிபி மற்​றும் மின்​னணு கையொப்​பம் மூலம் சமர்ப்​பிக்​கப்​பட்​டன. இதில் மாற்​றம் செய்யப்​பட்டு உள்​ளது. இனிமேல் இரு படிவங்​களாக தனித்​தனியாக சமர்ப்​பிக்க வேண்​டும். தனித்​தனி​யாக ஓடிபி, மின்​னணு கையொப்​பமிட வேண்​டும்" என்று தெரிவித்தன.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT