இந்தியா

மகளிர் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து இயக்கம்: பட்னாவிஸ் அறிவிப்பு

செய்திப்பிரிவு

மும்பை: சட்​டப்​பேரவை மற்​றும் நாடாளு​மன்​றத்​தில் பெண்களுக்கு 33% இடஒதுக்​கீடு வழங்​கு​வதை ஆதரித்​து, ஒரு கோடிக்​கும் அதி​க​மான பெண்​களிடம் கையெழுத்து இயக்​கம் நடை​பெறும் என்று மகாராஷ்டிர முதல்​வர் தேவேந்​திர பட்னாவிஸ் தெரி​வித்​துள்​ளார்.

இது குறித்து மும்​பை​யில் செய்​தி​யாளர்​களிடம் பட்​னா​விஸ் கூறிய​தாவது: மக்​களவை​யின் எண்​ணிக்​கையை அதி​கரிக்​க​வும், மகளிர் இடஒதுக்​கீட்டை விரைவுபடுத்​த​வும் கொண்டு வரப்​பட்ட அரசி​யல் சாசன திருத்த மசோ​தா​வைத் தோற்​கடித்​ததன் மூலம், எதிர்க்​கட்​சிகள் பெண்​களுக்கு மிகப் பெரிய துரோகத்தை இழைத்து​விட்​டன. இதனால், கடந்த ஏப்​ரல் 17-ம் தேதி ஜனநாயகத்துக்கு கருப்பு தின​மாகும்.

ஒரு கோடி பெண்​களிடம் கையெழுத்​தைப் பெற்று இந்த விவகாரத்​தில் எதிர்க்​கட்​சிகளுக்கு கடும் அழுத்​தத்தை உருவாக்குவோம். அதன் மூலம் இந்த மசோ​தாவை ஆதரிக்க வேண்​டிய கட்டா​யத்தை அவர்​களுக்கு ஏற்​படுத்​து​வோம். 2029-க்குள் மகளிர் இடஒதுக்​கீடு உறுதி செய்​யப்​படு​வதை நோக்கமாகக் கொண்​டு, இந்த மசோதா நிறைவேறும் வரை ஆளும் கூட்​டணி ஓயாது.

காங்​கிரஸ், திரிண​மூல் காங்​கிரஸ், திமுக, தேசி​ய​வாத காங்​கிரஸ் (சரத் பவார்), சிவசேனை (யுபிடி) ஆகிய கட்​சிகள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரி​விப்​பது, அவர்​களின் பெண் எதிர்ப்பு மனநிலையை காட்​டு​கிறது. அவர்​கள் இந்​தி​யா​வின் 70 கோடி பெண்​களை அவம​திக்​கும் வகை​யில் செயல்​பட்​டுள்​ளனர்.

மகாத்மா ஜோதி​ராவ் புலே மற்​றும் அம்​பேத்​கர் போன்ற சமூக சீர்திருத்​த​வா​தி​களின் கொள்​கைகளுக்கு எதி​ராக எதிர்க்​கட்​சிகள் செயல்​படு​கின்​றன. இந்த மசோ​தா​வில் உள்ள குறை​கள் குறித்து எந்​தவொரு எதிர்க்​கட்​சித் தலை​வரும் என்​னுடன் பொது மேடையில் விவா​திக்க தயா​ரா ? இவ்​வாறு பட்​னா​விஸ்​ தெரிவித்தா​ர்​.

SCROLL FOR NEXT