புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று இந்தியா வருகிறார். இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி சசிதரூர் கூறியதாவது: ரஷ்யாவுடனான உறவு பழமையானது, முக்கியமானது மற்றும் வலுவானது. அமெரிக்கா, சீனா, ரஷ்யாவுடன் நாம் சுமுகமான உறவை வைத்துக் கொள்ள வேண்டும்.
எந்த நாட்டின் நலனுக்காகவும், இந்தியா தனது பொருளாதாரத்தை அடமானம் வைக்க முடியாது. அனைத்து நாடுகளுடனும் நாம் தன்னிச்சையான உறவை வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சசிதரூர் கூறினார்.
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் அதிபர் புதின் பேசும்போது, "எரிசக்தி, தொழில்துறை, விண்வெளி, வேளாண்மை மற்றும் இதர துறைகளில் இந்தியா மற்றும் சீனாவுடனான ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது" என்றார்.