இந்தியா

தேசிய மாநாட்டு கட்சி எம்.பி. பதவி விலகல் - முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு பின்னடைவு

செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஆளும் தேசிய மாநாட்டு கட்சி​யின் மூத்த தலை​வர்​களில் ஒரு​வர் ஆகா சையத் ரூஹுல்லா மெஹ்தி. கட்​சி​யில் ஷியா பிரிவு முஸ்​லிம்​களின் முக்​கிய முக​மாக அறியப்படும் இவர், 2024 மக்​களவை தேர்​தலில் ஸ்ரீநகரில் போட்டியிட்டு வெற்​றிபெற்​றார்.

இந்​நிலை​யில், அவர் தேசிய மாநாட்டு கட்​சி​யில் இருந்து விலகுவதாகவும், எம்.பி. பத​வியை ராஜினாமா செய்​வ​தாகவும் அறிவித்துள்ளார். அவரது அறி​விப்பு ஸ்ரீநகரில் இடைத்​தேர்​தல் நடை​பெறு​வதற்​கு் வழிவகுத்​துள்​ளது. அவர் தனது ராஜினாமா கடிதத்​துடன், 4 பக்க அறிக்​கையையும் கட்சி தலை​மைக்கு அனுப்பியுள்​ளார்.

அதில், “காஷ்மீருக்கு சிறப்பு அஸ்​தஸ்து வழங்​கும் 370 மற்​றும் 35-ஏ சட்​டப்​பி​ரிவு​கள் ரத்து செய்​யப்​பட்​டது. இதற்கு எதிரான போராட்டத்​துக்கு தேசிய மாநாட்டு கட்சி தலைமை தாங்​கும் என்கிற நம்​பிக்​கை​யில் இருந்தேன். ஆனால், துரதிர்​ஷ்ட​வச​மாக அது நடக்​க​வில்லை. தேர்​தலுக்​குப் பிறகு கட்சி தனது நிலைப்பாட்டை மாற்​றிக்​கொண்​டது. மக்​களுக்கு செய்​யப்​பட்ட இந்த துரோகம் என்னை மிகவும் காயப்​படுத்​தி​யது” என குறிப்பிட்டுள்ளார். ரூஹுல்​லா​வின் இந்த திடீர் முடிவு முதல்​வர் உமர் அப்​துல்லா தலை​மையி​லான தேசிய மாநாட்டு கட்​சி ஆட்சிக்கு் பின்​னடைவாக அமைந்​துள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT