பாஜக மூத்த தலை​வர் சுவேந்து அதி​காரி

 
இந்தியா

புலம் பெயர் தொழிலாளர் பற்றி சுவேந்து அதிகாரி சர்ச்சை பேச்சு

செய்திப்பிரிவு

நந்திகிராம்: மேற்கு வங்க பேரவைத் தேர்தலை முன்னிட்டு அம்மாநில பாஜக மூத்த தலை​வர் சுவேந்து அதி​காரி கூறியுள்ளதாவது: மேற்கு வங்க மாநிலத்​தின் நந்​தி​கி​ராமில் இருந்து சுமார் 30,000 புலம்​பெயர் தொழிலா​ளர்​கள் வெளி​மாநிலங்​களில் உள்​ளனர்.

குறிப்​பாக, குஜ​ராத்​தில் 1,100 பேரும், ஒடி​சா​வில் 800 பேரும், மகாராஷ்டிரத்​தில் 3,300 பேரும் தங்​கிப் பணிபுரி​கின்​றனர். இவர்கள் பணி​யாற்​றும் ஒடி​சா, மகா​ராஷ்டிரம் மற்​றும் குஜ​ராத் ஆகிய மாநிலங்​களில் யாருடைய ஆட்சி நடக்​கிறது ? பாஜக​வின் ஆட்​சி​தான்! எனவே, வாக்​களிப்​ப​தில் தவறு செய்​து​வி​டாதீர்​கள். உங்​கள் போக்கை மாற்​றிக் கொள்​ளுங்​கள்.

          

அப்​போது​தான் வாக்கு எண்​ணிக்கை நாளான மே 4-க்​குப் பிறகு உங்​களுக்கு எந்​தப் பிரச்​சினை​யும் ஏற்​ப​டாது. நீங்​கள் மிரட்​டும் தொனி​யில் ‘ஜெய் பங்​களா’ முழக்​கங்​களை எழுப்​பலாம், ஆனால் நான் அனைத்​தை​யும் குறித்​துக் கொண்​டு ​தான் இருக்​கிறேன். இவ்​வாறு சுவேந்து அதி​காரி கூறி​யுள்​ளார்.

திரிண​மூல் கண்​டனம்: இது குறித்து நந்​தி​கி​ராம் தொகுதி திரிண​மூல் வேட்​பாளர் பவித்ரா கர் கூறுகை​யில், “மிரட்​டல் மற்றும் அச்​சுறுத்​தல் விடுப்​பதே சுவேந்து அதி​காரி​யின் அரசியலாக உள்​ளது. ஒரு மக்​கள் பிர​தி​நி​தி​யாகத் தொகு​தி​யில் அமை​தியை நிலை​நாட்ட வேண்​டிய அவரே, அதற்கு நேர்​மாறாகச் செயல்​படு​கிறார். இதற்கு நந்​தி​கி​ராம் மக்​கள் மின்​னணு வாக்குப்ப​திவு இயந்​திரம் மூலம் தேர்​தலில் உரிய பதிலடியை கொடுப்​பார்​கள்” என்​றார்.

இந்த விவ​காரம் தொடர்​பாக தேர்​தல் ஆணை​யத்​தில் புகார் அளிக்​கப்​படும் என்று திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் செய்​தித் தொடர்​பாளர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT