கோப்புப்படம்

 
இந்தியா

பெங்களூருவில் இன்று சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

செய்திப்பிரிவு

பெங்களூரு: கர்நாடக மாநில‌ திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று பெங்களூருவில் உள்ள தேவராஜ் அர்ஸ் பவனில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா நடத்தப்படுகிறது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெறும் இவ்விழாவை கர்நாடக சமூக நலத்துறை அமைச்சர் எச்.சி.மஹாதேவப்பா பகல் 12 மணியளவில் தொடங்கி வைக்கிறார்.

இதைத் தொடர்ந்து நடைபெறும் விழாவில் கர்நாடக அமைச்சர் பிரியாங்க் கார்கே, காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் அர்ஷத், எம்எல்சி பி.கே.ஹரிபிரசாத், தலித் சங்கர்ஷ சமிதி தலைவர் மாவள்ளி சங்கர், பேரா.எஸ்.ஜி.சித்தராமையா, எழுத்தாளர்கள் கே.எஸ்.பகவான், பஞ்சகெரே ஜெயபிரகாஷ், நடிகர் சேத்தன் அஹிம்சா, சமூக செயற்பாட்டாளர் டி.நரசிம்ம மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT