இந்தியா

பாதுகாப்புத் துறையில் தற்சார்பு: கடற்படை தலைமைத் தளபதி கருத்து

செய்திப்பிரிவு

புது டெல்லி: டெல்​லி​யில் நடை​பெற்ற 'ரெய்​சினா கலந்​துரை​யாடல் 2026' நிகழ்​வில் கடற்​படை தலை​மைத்தளபதி அட்​மிரல் தினேஷ் கே திரி​பாதி பேசி​ய​தாவது: ஒவ்​வொரு நாடும் தனது தேசிய பாது​காப்பை உறுதி செய்​யத் தயா​ராக இருக்க வேண்​டும். இதற்​குச் சொந்​த​மாக பாது​காப்​புத் தளவாட உற்​பத்தி ஆலைகளை உரு​வாக்​கு​வது மிக முக்​கி​யம்.

ராணுவத் தளவாடங்​களை பெரு​மள​வில் உற்​பத்தி செய்​வதுடன், உற்​பத்தி செய்​யும்​போதே அவற்றை நவீனப்​படுத்​த​வும் நாம் தயா​ராக இருக்க வேண்​டும். போர்​கள் குறுகிய காலத்​தில் முடிந்​து​விடும் என்ற எண்​ணம் மாறி வரு​கிறது.

          

பல்வேறு காரணங்​களால் பல நாடு​கள் தற்​சார்பு நிலையை நோக்​கித் தள்​ளப்​படு​கின்​றன. இந்​தியா தற்​சார்பு கொள்​கை​யில் உறு​தி​யாக உள்​ளது.

அதே சமயம், ரஷ்யா உள்​ளிட்ட நட்பு நாடு​களு​டன் இணைந்து பாது​காப்​புத் துறை​யில் கூட்​டுத் தயாரிப்பு மற்​றும் தொழில்​நுட்ப மேம்​பாட்​டிலும் நாம் ஈடு​பட்டு வரு​கிறோம். இவ்​வாறு தலைமைத் தளபதி திரி​பா​தி பேசி​னார்​.

SCROLL FOR NEXT