இந்தியா

காக்கிநாடா: காணாமல் போன 7 மீனவர்களை தேடும் பணி தீவிரம்

செய்திப்பிரிவு

காக்கிநாடா: ஆந்திராவின் காக்கிநாடா சுப்பம் பேட்டா பகுதியை சேர்ந்த 7 மீனவர்கள், கடந்த 11-ம் தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் கடந்த 14-ம் தேதி வரை அவரவர் குடும்பத்தினரிடம் செல்போனில் பேசியுள்ளனர். இதன் பிறகுயாரிடமிருந்தும் எவ்வித தகவல்களும் வரவில்லை.

இவர்களை தேடும் பணி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரகிறது. இது குறித்து தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் தற்போதைய நிலைமையை கேட்டறிந்தார். மேலும் மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT