இந்தியா

பெண் வயிற்றில் கத்திரிக்கோல்: 5 ஆண்டுக்குப் பின் கண்டுபிடிப்பு

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் புன்னப்ரா பகுதியைச் சேர்ந்தவர் உஷா ஜோசப் (55).

இவர் வந்தனம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2021-ம் ஆண்டு மே 5-ல் கர்ப்பப் பையில் இருந்த கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன்பின்பும் இவருக்கு தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனையில் எக்ஸ்-ரே எடுத்த போது வயிற்றில் கத்திரிக்கோல் இருப்பது தெரிய வந்தது. தவறை ஒப்புக் கொண்ட அரசு மருத்துவர்கள், கத்திரிக்கோலை அறுவை சிகிச்சை மூலம் எடுக்க மீண்டும் அட்மிட் ஆகும்படி கூறினர். ஆனால், தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உஷா ஜோசப் முடிவு செய்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT