இந்தியா

பிரதமர் மோடியுடன் பள்ளித் தோழர் திடீர் சந்திப்பு

நில ஆக்கிரமிப்பு வழக்கில் சிபிஐ விசாரணை கோரி மனு

செய்திப்பிரிவு

மும்பை / அகமதாபாத்: பிரதமர் மோடியை அவரது பள்​ளித் தோழ​ரான அஸ்​கரலி வோரா சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது தனக்​குச் சொந்​த​மான நிலம் ஆக்​கிரமிக்​கப்​பட்ட விவ​காரத்​தில் சிபிஐ விசா​ரணை நடத்​தக்கோரி மனு அளித்​தார்.

குஜ​ராத் மாநிலம் வாத்நகரில் உள்ள பி.என்.உயர்​நிலைப் பள்​ளி​யில் பிரதமருடன் ஒன்​றாகப் பயின்​றவர் அஸ்​கரலி வோரா(81). மும்பை மீரா ரோடு பகு​தி​யில் வசித்து வரும் இவர், கடந்த 8-ம் தேதி பிரதமரை நேரில் சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது தனக்​குச் சொந்​த​மான நிலம் அபகரிக்​கப்​பட்​டது குறித்​துப் புகாரளித்​துள்​ளார்.

மும்பை பயந்​தர் கிழக்​கு, நவ்​கர் பகு​தி​யில் அமைந்​துள்ள 2,810 சதுர மீட்​டர் பரப்​பளவு நிலத்தை அஸ்​கரலி சட்​டப்​படி வாங்கி உள்​ளார். இந்​நிலை​யில், போலி ஆவணங்​களைத் தயாரித்​து, ‘ஸ்​வ​யம் பில்​டர்​ஸ்’ மற்​றும் ‘செவன் இலவன் கன்​ஸ்ட்​ரக் ஷன்​ஸ்’ ஆகிய நிறு​வனங்​கள் நிலத்தை ஆக்​கிரமித்​த​தாக அஸ்​கரலி குற்​றம்​சாட்​டி​யுள்​ளார். இதில் செவன் இலவன் நிறு​வனத்​துடன் பாஜக எம்​எல்ஏ நரேந்​திர மேத்​தாவுக்​குத் தொடர்பு இருப்​ப​தாக​வும் அவர் குறிப்​பிட்​டுள்​ளார்.

நில அபகரிப்பு தொடர்​பாக காவல் துறை​யில் வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டது. இருப்​பினும், வரு​வாய்த் துறை மற்​றும் உள்​ளாட்சி நிர்​வாகத்​திடம் தொடர்ந்து போராடி​யும் அவருக்​குத் தீர்வு கிடைக்​க​வில்​லை. வழக்கு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ளது.

பல ஆண்​டு​களாகத் தொடர்ந்த போராட்​டத்​தின் முடி​வில், டெல்​லி​யில் பிரதமர் மோடியை நேரில் சந்​தித்த அஸ்​கரலி, நிலப்​பறிப்பு விவ​காரம் குறித்து விவரித்து சிபிஐ விசா​ரணை கோரி​னார். இதைத் தொடர்ந்​து, உள்​ளாட்சி நிர்​வாகம் தீவிர விசா​ரணை​யில் இறங்​கி​யுள்​ளது. வரும் 16-ம் தேதி நடை​பெறவுள்ள நேரடி விசா​ரணைக்கு சம்​பந்​தப்​பட்ட கட்​டு​மான நிறு​வனங்​களின் பிர​தி​நி​தி​கள் நேரில் ஆஜராக அழைப்​பாணை அனுப்​பப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT