இந்தியா

பிரியங்கா காந்தி பெயரை பயன்படுத்தி மோசடி - கேரள எம்எல்ஏ, எம்.பி.க்களிடம் பணம் பறிக்க முயன்றவர் மீது வழக்கு

செய்திப்பிரிவு

வயநாடு: கேரளாவின் வயநாடு தொகுதி காங்​கிரஸ் எம்​.பி.​யான பிரி​யங்கா காந்தியின் தனிச்​செய​லா​ளர் டி.எஸ்​.​ராஜ்கு​மார். இவரது பெயரை​யும், அடை​யாளத்​தை​யும் தவறாகப் பயன்படுத்தி, எலத்​தூர் தொகுதி காங்​கிரஸ் எம்​எல்ஏ வித்யா பாலகிருஷ்ணன், எம்​.பி.க்​கள் ஷாஃபி பரம்​பில், டீன் குரிய கோஸ் ஆகியோரைத் தொடர்பு கொண்ட மோசடி ஆசாமி, பிரி​யங்கா காந்​தி​யின் அலு​வல​கப் பெயரைப் பயன்​படுத்​திப் பணம் கேட்டுமிரட்​டி​யுள்​ளார்.

இதையடுத்​து, கேரள காவல் துறைத் தலை​வரிட​மும், வயநாடு மாவட்​டக் காவல் கண்​காணிப்​பாளரிட​மும் பிரி​யங்​கா​வின் தனிச் செய​லா​ளர் ராஜ்கு​மார் புகார் அளித்​தார். அதன் அடிப்​படை​யில், ஆள் ​மாறாட்​டம் செய்த அந்த நபர் மீது வயநாடு சைபர் கிரைம் போலீ​ஸார் புதன்​ கிழமை வழக்​குப்​ ப​திவு செய்​தனர்.

முன்​ன​தாக, பாதிக்​கப்​பட்ட எலத்​தூர் தொகுதி பெண் எம்எல்ஏ வித்யா பால​கிருஷ்ணன் கோழிக்​கோடு சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்​திருந்​தார்.

இதுகுறித்து போலீ​ஸார் தரப்​பில் கூறப்​படு​வ​தாவது: ஜூலை 6ம் தேதி மதி​யம் எம்​எல்ஏ வித்யா பால ​கிருஷ்ணனுக்கு வாட்​ஸ்​அப் மூலம் அழைப்பு வந்​துள்​ளது. அதில் பேசியவர், தன்னை டெல்லியில் உள்ள பிரி​யங்கா காந்​தி​யின் அலு​வலக அதி​காரி ராஜ் கு​மார் என்று அறி​முகப்​படுத்​தி​க் கொண்டுள்​ளார்.

கேரளா​வில் விரை​வில் அமைச்​சரவை மாற்​றம் செய்​யப்பட உள்ளதாக​வும், ரூ.3 கோடி பணம் கொடுத்​தால் அமைச்​சர் பதவி வாங்கித் தரு​வ​தாக​வும் தெரிவித்துள்​ளார். இதையடுத்​து, பிரியங்கா காந்​தி​யின் டெல்லி அலு​வல​கத்​தைத் தொடர்பு கொண்டு விசா​ரித்​த​போது​, அது போலி அழைப்பு என்​பது உறுதியானது.

இது தொடர்பாக பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், இந்த போலி அழைப்பு டெல்லியில் இருந்து வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தனிப்படையினர் விரைவில் அங்கு செல்ல உள்ளனர்.

SCROLL FOR NEXT