இந்தியா

கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் எஸ்சி அந்தஸ்து பறிபோகும்: உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கிறிஸ்தவ மதத்​துக்கு மாறி​னால் எஸ்சி அந்​தஸ்து பறி​போகும். இந்​துக்​கள், சீக்கியர்​கள், புத்த மதத்​தினர் மட்​டுமே பட்​டியல் சமூகத்​தின​ராக இருக்க முடி​யும் என்று உச்ச நீதி​மன்​றம் தீர்ப்​பளித்து உள்​ளது.

ஆந்​தி​ரா​வின் குண்​டூர் மாவட்​டம், கொத்​த​பெலம் கிராமத்​தைச் சேர்ந்​தவர் சிந்​ததா ஆனந்த். இவர் தனது கிராமத்​தில் ஞாயிறுதோறும் கிறிஸ்தவ மத பிரார்த்​தனை கூட்​டங்​களை நடத்தி வந்துள்​ளார். இந்த சூழலில் அக்​கலா ராமி ரெட்டி உள்ளிட்ட சிலர் தன்னை தாக்​கிய​தாக உள்​ளூர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்​தார். இதன்​பேரில் எஸ்​சி, எஸ்டி வன்​கொடுமை தடுப்புச் சட்​டத்​தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

          

இது தொடர்​பான வழக்கு குண்​டூரில் உள்ள எஸ்​சி, எஸ்டி வழக்குகளை விசா​ரிக்​கும் சிறப்பு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்​தது. இதனிடையே வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட அக்​கலா ராமி ரெட்டி உள்​ளிட்​டோர் ஆந்​திர உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்கல் செய்​தனர்.

அதில்,"பு​கார்​தா​ரர் சிந்​ததா ஆனந்த் கிறிஸ்தவ மதத்​துக்கு மாறி 10 ஆண்​டு​களாகப் போதக​ராக உள்​ளார். எனவே எஸ்​சி, எஸ்டி வன்​கொடுமை தடுப்பு சட்​டத்​தின் கீழ் அவர் புகார் அளிக்க முடியாது. வழக்கை ரத்து செய்ய வேண்​டும்" என்று கோரப்​பட்​டது.

இந்த மனுவை விசா​ரித்த ஆந்​திர உயர் நீதி​மன்​றம், “கிறிஸ்தவ மதத்​தில் சாதிய அமைப்பு இல்​லை. எனவே கிறிஸ்தவ மதத்​துக்கு மாறிய சிந்​ததா ஆனந்த் எஸ்சி வன்​கொடுமை சட்​டத்​தின் கீழ் பாது​காப்பு கோர முடி​யாது" என்று தீர்ப்​பளித்​தது. இதை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் சிந்​ததா ஆனந்த் மேல்​முறை​யீடு செய்​தார். இந்த மனுவை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் பிர​சாந்த் குமார் மிஷ்ரா, மன்​மோகன் அடங்​கிய அமர்வு விசா​ரித்து நேற்று தீர்ப்பு அளித்​தது.

அந்த தீர்ப்பில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​து, சீக்​கி​யம், புத்த மதங்​களைத் தவிர்த்து ஏனைய மதங்​களுக்கு மாறும் பட்​டியலின மக்​கள் உடனடி​யாக எஸ்சி அந்​தஸ்தை இழக்க நேரிடும். இந்​துக்​கள், சீக்கியர்​கள், புத்த மதத்​தினர் மட்​டுமே பட்​டியல் சமூகத்​தின​ராக இருக்க முடி​யும். மதம் மாறிய பிறகு பட்​டியலின சமூகத்​தைச் சேர்ந்​தவர் என்று யாரும் உரிமை கோர முடி​யாது. எஸ்​சி, எஸ்டி பிரிவுக்​கான பாது​காப்பு பலன்​களை​யும் கோர முடி​யாது.

இந்த வழக்​கில் மனு​தா​ரர் கிறிஸ்தவ மதத்​தைப் பின்​பற்றி 10 ஆண்​டு​களுக்கு மேலாகப் போதக​ராக செயல்​பட்டு வரு​வது நிரூபண​மாகி உள்​ளது. தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தாகக் கூறப்​படும் நாளி​லும் அவர் கிறிஸ்​தவ​ராக இருந்​துள்​ளார். எனவே ஆந்​திர உயர் நீதி​மன்​றத்​தின் தீர்ப்பை உறுதி செய்​து, மனு​தா​ரரின் மேல்​முறை​யீட்டு மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது. இவ்​வாறு தீர்ப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டு உள்​ளது.

SCROLL FOR NEXT