உச்ச நீதிமன்றம் 
இந்தியா

மருத்துவ காலியிடங்களை தமிழகத்திடம் ஒப்படைப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தமிழகத்​தில் கலந்​தாய்வு முடிந்த பின்​னரும் காலி​யாக இருந்த உயர்​ சிறப்பு மருத்​து​வப் படிப்​புக்​கான இடங்​கள் அகில இந்​திய தொகுப்​புக்கு ஒப்​படைக்​கப்​பட்​டது.

அவ்​வாறு ஒப்​படைக்​கப்​பட்ட இடங்​களை நிரம்​பாமல் இருந்​தால் அதனை முழு​வது​மாக மீண்​டும் தமிழக அரசு வசம் ஒப்​படைக்க வலி​யுறுத்தி தமிழ்​நாடு மருத்​துவ அதி​காரி​கள் சங்​கம் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. அந்த வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​கள் பி.எஸ்​.நரசிம்​மா, அலோக் ஆராதே ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது.

அப்போது, தமிழ்​நாடு மருத்​துவ அதி​காரி​கள் சங்​கம் சார்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் பி.​வில்​சன், “தமிழகத்​தில் கலந்​தாய்​வுக்கு பின்​னரும் நிரம்​பாமல் இருந்த 151 உயர் சிறப்பு மருத்​துவ படிப்​புக்​கான இடங்​கள் அகில இந்​திய தொகுப்​புக்கு வழங்​கப்​பட்​டன. அவ்​வாறு வழங்​கிய இடங்​கள் கலந்​தாய்வு முடிந்த பின்​னரும் நிரம்​பாமல் இருந்​தால் அவற்றை மீண்​டும் தமிழகம் வசம் ஒப்​படைக்க வேண்​டும்” எனக் கோரி​னார்.

அதற்கு மத்​திய அரசு தரப்​பில், தமிழகம் முதலில் 151 இடங்​களை​யும், பின்​னர் மேலும் 2 இடங்​களை​யும் அகில இந்​திய தொகுப்​புக்கு வழங்​கிய​தாக​வும், அவற்​றில் 113 இடங்​கள் நிரப்​பப்​பட்​டு​விட்​ட​தாக​வும் தெரிவிக்​கப்​பட்​டது.

தமிழ்​நாடு மருத்​துவ அதி​காரி​கள் சங்​கம் தரப்​பில், அகில இந்​திய தொகுப்​புக்கு தமிழகத்​தால் வழங்​கப்​பட்ட இடங்​களில் நிரம்​பாமல் உள்ள 40 உயர் சிறப்பு மருத்​துவ படிப்​புக்​கான இடங்​களை​யும் தமிழகத்​திற்கே திரும்ப வழங்க வேண்​டும். மேலும், அந்த மருத்​துவ இடங்​களை தமிழகத்​தில் கலந்​தாய்வு மூலம் நிரப்​புவதற்கு ஏது​வாக கட்​-ஆஃப் மதிப்​பெண் சதவீதத்​தை​யும் குறைக்க வேண்​டும் எனவும் கோரப்​பட்​டது. 111 மருத்​து​வர்​கள் உயர் சிறப்பு மருத்​து​வப் படிப்​பு​களில் சேர தமிழகத்​தில் காத்​திருப்​ப​தாக​வும் எடுத்​துரைக்​கப்​பட்​டது.

இந்த வாதங்​களை கேட்ட நீதிபதிகள், நிரம்​பாமல் உள்ள 40 உயர் சிறப்பு மருத்​து​வ இடங்​களை நிரப்​புவதற்கு ஏது​வாக கட்​-ஆஃப் சதவீதத்தை குறைத்​து, அந்த இடங்​களை தமிழகம் வசமே திரும்ப ஒப்​படைப்​பது குறித்து மத்​திய அரசு ஒரு வாரத்​தில் முடி​வெடுக்க அறி​வுறுத்​தி, வழக்கை ஒத்​திவைத்​தனர்​.

SCROLL FOR NEXT