இந்தியா

யுனெஸ்கோ பாரம்பரியப் பட்டியலில் சாரநாத்: இந்தியாவுக்கு 45-வது பெருமை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள பழமையான பவுத்த புனிதத் தலமான சாரநாத், யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் நேற்று அதிகாரப்பூர்வமாகச் சேர்க்கப்பட்டது.

தென்கொரியாவின் பூசான் நகரில் நடைபெற்று வரும் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் குழுவின் 48-வது அமர்வில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. இந்த அறிவிப்பால், யுனெஸ் கோவின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெறும் இந்தியாவின் 45-வது இடமாக சாரநாத் பெருமை பெற்றுள்ளது.

முன்னதாக, 2025-26 தேர்வுச் சுற்றுக்காக ‘பழமையான பவுத்ததலம் - சாரநாத்’ என்ற ஆவணத்தை யுனெஸ்கோவிடம் சமர்ப்பித்துள்ளதாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கடந்த 2025 ஆகஸ்டில் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்திருந்தார்.

உலகின் கலாச்சார மற்றும் இயற்கைச் சின்னங்களைப் பாதுகாக்கும் சர்வதேச ஒப்பந் தத்தைச் செயல்படுத்தும் 2 முக்கிய அமைப்புகளில், இந்த ‘உலகப் பாரம்பரியக் குழுவும்’ ஒன்றாகும்.

SCROLL FOR NEXT