இந்தியா

நம்பிக்கை வாக்கெடுப்பில் சாம்ராட் சவுத்ரி அரசு வெற்றி

செய்திப்பிரிவு

பாட்னா: பிஹார் சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான என்டிஏ அரசு எளிதில் வெற்றி பெற்றது.

பிஹாரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக இருந்த நிதிஷ் குமார் கடந்த 10-ம் தேதி மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய அரசியலில் ஈடுபட முடிவு செய்த அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி (57) பிஹார் முதல்வராக கடந்த 15-ம் தேதி பதவியேற்றார்.

பிஹாரில் முதல்முறையாக பாஜக தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது. இதையடுத்து 243 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான என்டிஏ அரசு எளிதில் வெற்றி பெற்றது.

SCROLL FOR NEXT