கோப்புப்படம்

 
இந்தியா

ஜம்முவில் குடிநீர் வரி செலுத்தாத அரசு ஊழியருக்கு சம்பளம் ‘கட்’!

செய்திப்பிரிவு

ஜம்மு: ஜம்மு பகுதியில் குடிநீர் வரி செலுத்தாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் சுமார் 15.64 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதாவது 81.22 சதவீத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் பெரும்பாலானோர் முறையாக குடிநீர் வரியை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக அரசு ஊழியர்களும் வரியை செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இந்த சூழலில் ஜம்மு பிராந்திய அரசு நிர்வாகம் அண்மையில் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டு உள்ளது. இதன்படி, ‘‘குடிநீர் வரி நிலுவை இல்லை’’ என்று ஜல் சக்தி துறையிடம் இருந்து அரசு ஊழியர்கள் தடையில்லா சான்றை பெற்று அவர்கள் சார்ந்த துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் சம்பளம் வழங்கப்படும். இல்லையென்றால் சம்பளம் வழங்கப்படாது என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT