இந்தியா

1984 சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்​டனை பெற்று சிறையில் இருந்த சஜ்ஜன் குமார் உடல்​நலக்​குறை​வால் காலமானார்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சீக்கியர்களுக்கு எதி​ரான கலவர வழக்​கில் ஆயுள் தண்​டனை அனுப​வித்து வந்த காங்​கிரஸ் கட்​சி​யின் முன்​னாள் நாடாளு​மன்ற உறுப்​பினர் சஜ்ஜன் குமார் (80), உடல்​நலக்​குறை​வால் டெல்லி திகார் சிறை​யில் நேற்று கால​மா​னார்.

1984-ம் ஆண்டு அக்​டோபர் 31-ல் அப்​போதைய பிரதமர் இந்​திரா காந்​தி, அவரது சீக்​கிய மெய்க்​காப்​பாளர்​களால் படு​கொலை செய்​யப்​பட்​டார். இதைத் தொடர்ந்​து, டெல்லி மற்​றும் வட இந்​தி​யா​வின் பல பகு​தி​களில் சீக்​கியர்​களுக்கு எதி​ராக பெரும் கலவரம் வெடித்​தது. டெல்​லி​ கலவரத்​தில் மட்​டுமே சுமார் 3,000 பேர் உயி​ரிழந்​த​தாக அரசுத் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

இந்த வன்​முறைக்​குப் பின்​னணி​யில் மூளை​யாகச் செயல்​பட்​ட​வர் என டெல்லி காவல் துறை​யால் சுட்​டிக்​காட்​டப்​பட்​ட​வர் காங்​கிரஸ் முன்​னாள் எம்​.பி. சஜ்ஜன் குமார். செல்​வாக்​குமிக்க ஜாட் சமூகத் தலை​வ​ரான இவர், ரங்​க​நாத் மிஸ்ரா ஆணை​யம் மற்​றும் ஜெயின்​-அகர்​வால் குழு போன்ற விசா​ரணை அறிக்​கை​களில் இடம் பெறாத​தால், 30 ஆண்​டு​களுக்​கும் மேலாகக் குற்​ற​வாளி​யாகச் சேர்க்​கப்​ப​டா​மல் இருந்​தார்.

இருப்​பினும், 2015-ல் பாஜக அரசு, முடித்து வைக்​கப்​பட்ட கலவர வழக்​கு​களை மீண்​டும் விசா​ரிக்க சிறப்பு விசா​ரணைக் குழுவை அமைத்தது. புதிய விசா​ரணை​யின் மூலம் வலு​வான ஆதா​ரங்​கள் திரட்​டப்​பட்​டு, 30 ஆண்​டு​களாகத் தப்​பித்து வந்த சஜ்ஜன் குமாருக்கு நீதி​மன்​றத்​தில் ஆயுள் தண்​டனை பெற்​றுத் தரப்பட்டது.

அதனைத் தொடர்ந்​து, டெல்லி திகார் சிறை​யில் ஆயுள் தண்டனை அனுப​வித்து வந்த சஜ்ஜன் குமார், நேற்று உடல்​நலக்​குறை​வால் சப்​தர்​ஜங் மருத்​து​வ​மனைக்​குக் கொண்டு செல்லப்பட்ட நிலை​யில், அவர் ஏற்​கெனவே இறந்​து​விட்​ட​தாக மருத்​துவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT