மும்பை: மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: நமது முன்னோர்களிடம் இருந்து மிகச் சிறந்த ஆன்மீகப் பாரம்பரியத்தை இந்தியா பெற்றுள்ளது.
துறவிகள் மற்றும் ஞானிகளிடம் இருந்து நாம் தொடர்ந்து வழிகாட்டுதல்களைப் பெற்று வருகிறோம். முழு பிரபஞ்சத்தையும் தர்மமே இயக்குகிறது; அனைத்தும் அதன் அடிப்படையில்தான் இயங்குகின்றன. இத்தகைய தர்மம் பாரதத்தை இயக்கும் வரை, இந்தியா உலகின் விஸ்வகுருவாக திகழும்.
உலகின் பிற நாடுகளிடம் ஆன்மீகம் இல்லாத காரணத்தால் இத்தகைய அறிவாற்றல் அவர்களிடம் இல்லை. நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பொக்கிஷம் தர்மம். இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.