நாக்பூர்: சுற்றுச்சூழல் பாதிக்கப்படாதவாறு தீபாவளியைக் கொண்டாட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோகன் பாகவத், “சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் நாம் தீபாவளியைக் கொண்டாட வேண்டும். முந்தைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட பட்டாசுகளில் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் இல்லை. அவை பூச்சிகளை ஒழிக்க உதவின. நெய் மற்றும் எண்ணெய் கொண்டு விளக்குகளை ஏற்றுவது காற்றைச் சுத்திகரிக்கிறது. இந்த பாரம்பரிய நடைமுறைகளுக்குப் பின்னால் அறிவியல் உள்ளது. சுற்றுச்சூழல் தூய்மையாக இருந்தால் வாழ்க்கை தூய்மையாகும்.
தர்மம் சமூகத்தை ஒன்றிணைக்கும் பணியைச் செய்கிறது. ஆண்களைவிட பெண்கள் தர்மத்தைப் பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் தீபாவளி 5 நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. மக்கள் ஒன்றுகூடி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் இது இந்தியர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது” என தெரிவித்துள்ளார்.