இந்தியா

2-ம், 3-ம் நிலை நகரங்கள், கோயில் நகரங்கள் வளர்ச்சிக்கு ரூ.5,000 கோடி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட் 2026-ல் அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கோ​யில் நகரங்​கள், இரண்​டாம், மூன்​றாம் நிலை நகரங்​களின் வளர்ச்​சிக்​காக மத்​திய பட்​ஜெட்​டில் ரூ.5,000 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் தாக்​கல் செய்த பட்​ஜெட்​டில் கூறி​யிருப்​ப​தாவது: நவீன உள்​கட்​டமைப்பு மற்​றும் அடிப்​படை வசதி​கள் தேவைப்​படும் இரண்​டாம் நிலை, மூன்​றாம் நிலை நகரங்​கள் மற்​றும் கோயில் நகரங்​கள் மீது இனி நாங்​கள் கவனம் செலுத்​து​வோம்.

          

இந்த பட்​ஜெட், நகரங்​களின் வளர்ச்​சி​யைத் தூண்​டும் காரணி​களை அடிப்​படை​யாகக் கொண்டு ‘நகரப் பொருளா​தார மண்​டலங்​களை' (CER) வரைபட​மாக்​கு​வதன் மூலம், நகரங்​களின் பொருளா​தார சக்​தியை மேலும் அதி​கரிக்க முயல்​கிறது. இதற்​காக, ஒரு மண்​டலத்​துக்கு ஐந்து ஆண்​டு​களுக்கு தலா ரூ. 5,000 கோடி நிதி ஒதுக்​கப்​படும்.

இந்​தத் திட்​டங்​கள் சீர்​திருத்​தம் மற்​றும் முடிவு​களின் அடிப்​படையி​லான நிதி வழங்​கும் முறை​யின் கீழ் செயல்​படுத்​தப்​படும், மேலும் உள்​கட்​டமைப்பு மேம்​பாடு மற்​றும் கட்​டு​மானத்​தின்​ போது ஏற்​படும் இடர்​கள் குறித்து தனி​யார் நிறு​வனங்​களின் நம்​பிக்​கையை வலுப்​படுத்த, கடன் வழங்​குபவர்​களுக்கு முறை​யான பகுதி கடன் உத்​தர​வாதத்தை வழங்க ரூ.25 ஆயிரம் கோடி​யில் புதிய உள்கட்டமைப்பு இடர் உத்​தர​வாத நிதி​யம் உரு​வாக்​கப்​படும்.

ரூ.1,000 கோடிக்​கும் அதி​க​மாக வெளி​யிடப்​படும் நகராட்சி பத்திரங்​களுக்கு ரூ.100 கோடி ஊக்​கத் தொகை வழங்​கப்​படும். வளர்ச்​சியை இணைக்​கும் வித​மாக முக்​கிய நகரங்​களுக்கு இடையே 7 அதிவேக ரயில் வழித் ​தடங்​கள் நிறு​வப்​படும்.

மும்பை - புனே, புனே - ஹைத​ரா​பாத், ஹைத​ரா​பாத் - பெங்​களூரு, ஹைத​ரா​பாத் - சென்​னை, சென்னை - பெங்​களூரு, டெல்லி - வாராணசி மற்​றும் வாராணசி - சிலிகுரி ஆகிய நகரங்​களை இணைக்க ஏழு அதிவேக ரயில் வழித்​தடங்​கள் அமைக்​கப்​படும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT