புதுடெல்லி: போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக ரகசிய தகவலின் அடிப்படையில் தெற்கு டெல்லி பகுதியில் போலீஸார் திடீர் சோதனை நடத்தி பிராங்க் விடஸ் உமே என்ற நைஜீரிய இளைஞரை கைது செய்தனர்.
அவரது வீட்டில் சோதனை நடத்திய போது கோகைன் மற்றும் எம்டிஎம்ஏ போதைப் பொருள் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன்பிறகு நைஜீரியாவைச் சேர்ந்த சண்டே ஒட்டூ என்பவர் மெஹ்ராலி பகுதியில் கைது செய்யப்பட்டார்.
இவரது வீட்டிலும் எம்டிஎம்ஏ மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடத்தல் கும்பலில் தொடர்புடைய மற்றவர்களை கைது செய்ய மேலும் விசாரணை நடைபெறுகிறது.