இந்தியா

போலி சிபாரிசு கடிதங்கள் மூலம் ஏழுமலையான் பக்தர்களிடம் ரூ.4.22 லட்சம் மோசடி

திருமலை போலீஸார் வழக்குப் பதிவு

என்.மகேஷ்குமார்

திருமலை: ​திரு​மலையை சேர்ந்த இடைத்​தரகர் நிம்மல ஸ்ரீநிவாஸுடன் குண்​டூரைச் சேர்ந்த ஸ்ரீநி​வாச ரெட்டி பழகி வந்துள்ளார். கடந்த 22ம் தேதி, தனது உற்​றார், உறவினர்​கள் என மொத்​தம் 60 பேருக்கு ஏழு​மலை​யான் தரிசனம், திரு​மலை​யில் தங்​கும் அறை போன்​றவை வேண்​டும் என ஸ்ரீநி​வாச ரெட்டி கேட்டுள்​ளார்.

இதற்​காக விஐபி தரிசனத்​திற்​காக 60 பேருக்கு ரூ.3.60 லட்​சம், 12 தங்​கும் அறை​களுக்​காக ரூ.62 ஆயிரம் என மொத்​தம் ரூ.4.22 லட்சத்தை வங்கி மூலம் ஸ்ரீநி​வாச ரெட்​டி, நிம்மல ஸ்ரீநி​வாஸுக்கு அனுப்பி வைத்​துள்​ளார். இவர்​கள் அனை​வருக்​கும் கடந்த ஜூன் 22ம் தேதி தரிசனம் செய்து வைப்​ப​தாக நிம்மல ஸ்ரீநி​வாஸ் கூறி, எம்​.எல்​.ஏக்​கள், எம்​பிக்​களின் பெயரில் போலி சிபாரிசு கடிதங்களை தயாரித்​துக் கொடுத்​துள்​ளார்.

திரு​மலை​யில் உள்ள கூடு​தல் நிர்​வாக அதி​காரி அலு​வல​கத்​தில் அந்த கடிதங்​களை கொடுத்​துள்​ளனர். இவை அனைத்​தும் போலி​ என தெரிய வந்தது. இது குறித்து அவர்​கள் திரு​மலை முதலா​வது போலீஸ் நிலை​யத்​தில் புகார் அளித்​தனர். இதையடுத்து தலைமறை​வாகி உள்ள இடைத்​தரகர் நிம்மல ஸ்ரீநி​வாஸ் மீது வழக்கு பதிவு செய்த போலீ​ஸார் அவரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT