பெங்​களூரு மாநகர காவல் ஆணை​யர் சீமந்த் குமார் சிங்

 
இந்தியா

பெங்​களூரு​வில் ரூ.23.61 கோடி போதைப் பொருள் பறி​முதல்

செய்திப்பிரிவு

பெங்​களூரு: பெங்​களூரு மாநகர காவல் ஆணை​யர் சீமந்த் குமார் சிங் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பெங்களூரு மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் போதைப்​ பொருள் தடுப்​புப் பிரி​வினருடன் இணைந்து பாகலூர், பானச​வாடி உள்ளிட்ட 8 காவல் நிலைய சரகத்​துக்​குட்​பட்ட‌ இடங்​களில் போதைப் ​பொருள் கடத்​தலைத் தடுக்​கும் பணி​யில் ஈடு​பட்​டனர்.

இதில் மொத்​த​மாக 5.91 கிலோ எம்​டிஎம்ஏ, 21.82 கிலோ ஹைட்ரோ கஞ்​சா, 1.51கிலோ கோக்​கைன் உள்​ளிட்ட போதைப் பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. இது தொடர்​பாக வெளி​நாட்​டினர் 3 பேர் (2 பெண்​கள் ) உட்பட 10 பேர் கைது செய்​யப்​பட்​டனர். இதில் 5 பேர் வெளி​ மாநிலங்​களை சேர்ந்​தவர்​கள் ஆவர். கைதானவர்களிடம் இருந்து 3 கார், 2 இரு சக்கர வாக​னங்​கள், 9 செல்​போன்​கள், ரூ.50 ஆயிரத்து 500 ரொக்​கம், 28 கி​ராம் தங்க நகைகள் ஆகியவை பறி​முதல் செய்​யப்​பட்​டன.

பறி​முதல் செய்​யப்​பட்ட போதைப் பொருட்​க‌ளின் சந்தை மதிப்பு ரூ.23.61 கோடி என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. கைதான 10 பேர் மீதும் வழக்​குப் ​ப​திவு செய்து போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வருகின்றனர். முதற்​கட்ட விசா​ரணை​யில், ‘கூரியர் மூலம் வெளிநாட்​டில் இருந்​தும் வெளி மாநிலங்​களில் இருந்​தும் போதைப் பொருளை வர வழைத்​து, பெங்​களூரு​வில் கல்​லூரி மாணவர்​கள் மத்​தி​யில் விற்​பனை செய்​தது’ தெரிய​வந்​துள்ளது. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT