18 கிலோ கஞ்​சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட தம்பதி

 
இந்தியா

ரூ.18 கோடி கஞ்சா பறிமுதல்: கேரளாவில் தம்பதி கைது

செய்திப்பிரிவு

கொச்சி: கேரளா​வில் 'ஆபரேஷன் தூஃ​பான்' என்ற பெயரில் தீவிர போதைப் பொருள் தடுப்பு நடவடிக்​கையை அரசு மேற்கொண்டுள்​ளது.

இதன் ஒரு பகு​தி​யாக கொச்சி அருகே வைபின் பகு​தியை சேர்ந்த ஆயுஷ், அவரது மனைவி அனிகா ஆகிய இரு​வரை பெரும்​பாவூரில் போலீ​ஸார் நேற்று முன்​தினம் இரவு கைது செய்​தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 18 கிலோ உயர்தர கஞ்​சாவை பறிமுதல் செய்தனர்.

இதன் மதிப்பு ரூ.18 கோடியாகும். இது குறித்து டிஐஜி யதீஷ் சந்திரா கூறுகை​யில்,"இந்த தம்​ப​தி​யிட​மிருந்து போதைப்​ பொருட்களை வாங்​கிய சில்​லறை வி​யா​பாரி​கள் மற்​றும் வாடிக்கை​யாளர்​களை தேடி வரு​கிறோம்" என்​றார்​.

SCROLL FOR NEXT