ரூ.14.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்
குவாஹாட்டி: அசாமில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.14.5 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா சமூக ஊடகத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், "போதைப் பொருட்களுக்கு எதிரான எங்கள் போர் தீவிரமாக உள்ளது. அந்த வகையில், ஸ்ரீபூமி மற்றும் நாகான் ஆகிய 2 மாவட்டங்களில் தொடர் சோதனை நடத்தப்பட்டது.
அந்த நடவடிக்கையின்போது, காவல் துறையினர் ரூ.14.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும்" என கூறியுள்ளார்.