இந்தியா

டிஜிட்டல் கைது மோசடி மூலம் 70 வயது மூதாட்டியிடம் ரூ.3 கோடி பறிப்பு - டேராடூனில் நடந்தது என்ன?

செய்திப்பிரிவு

டேராடூன்: டிஜிட்​டல் கைது மோசடி மூலம் 70 வயது மூதாட்டியிடம் ரூ.3.09 கோடியை பறித்த கும்​பல் குறித்து போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

உத்​த​ராகண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒரு​வர் 3 நாட்​களுக்கு முன்பு டேராடூடன் சைபர் போலீ​ஸில் ஒரு புகாரைக் கொடுத்​துள்​ளார்.

அதில் அவர் கூறி​யுள்​ள​தாவது: கடந்த ஆண்டு செப்​டம்​பர் 1ம் தேதி எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்​தது. அதில் பேசிய நபர் தன்னை சிபிஐ அதி​காரி என்​றும், ரூ.68 கோடி சட்​ட​விரோத பணப்​ பரி​மாற்ற வழக்​கில் எனது செல்​போன் எண்​ணுக்கு தொடர்பு இருப்​ப​தாக​வும், நான் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​படு​வேன் என்​றும் எச்​சரிக்கை விடுத்​தார்.

          

இந்த வழக்​கில் டிஜிட்​டல் கைது செய்​யப்​பட்​டுள்​ளீர்​கள் என்​றும், இந்த விவ​காரத்தை யாரிட​மாவது தெரி​வித்​தால் உங்​கள் மீது சட்டப்​படி நடவடிக்கை எடுக்​கப்​படும் என்​றும் அந்த நபர் மிரட்டினார். எனவே, இந்த விஷ​யத்​தில் உங்​களை கைது செய்யாமல் இருக்க வேண்​டு​மா​னால், வங்கி விவரங்​களை தர வேண்​டும் என்​றும், விசா​ரணை முடிந்​ததும் உங்​களது பணம் உங்களிடமே திரும்பி வந்து விடும் என்​றும் அவர்​கள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு செப்​டம்​பர் முதல் அக்​டோபர் மாதம் வரை என்​னுடைய வங்​கிக் கணக்​கி​ல் இருந்து ரூ.3.09 கோடியை அவர்​கள் எடுத்​து​விட்டனர்.

அதன் பின்​னரே இது மோசடி என்று எனக்​குத் தெரிந்​தது. என்னுடைய நிரந்தர வைப்​பு, பங்​கு​களை விற்​றது மூலம் கிடைத்த பணம், நகைகளை அடகு வைத்து பணத்​தைக் கொடுத்​தேன். ஒவ்வொரு முறை பணம் அனுப்​பும்​போதும் நீங்​கள் கைது செய்யப்​ப​டா​மல் இருக்​கவே இந்த பணம் என்று அவர்​கள் நம்பிக்கை ஊட்​டினர். இவ்​வாறு அந்​தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்​ளது. இதுதொடர்​பாக டேராடூன் போலீ​ஸார்​ விசா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT