இந்தியா

ரூ.100 கோடிக்கும் மேல் சொத்துக் குவிப்பு புகார்: தெலங்கானா போக்குவரத்து அதிகாரி வீட்டில் திடீர் சோதனை

என். மகேஷ்குமார்

ஹைதராபாத்: தெலங்​கா​னா​வில் போக்​கு​வரத்து துறை அதி​காரி ரூ.100 கோடிக்​கும் மேல் சட்​ட​விரோத​மாக சொத்து குவித்​த​தாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை அதி​காரி​கள் அவரது வீடு உட்பட 11 இடங்​களில் சோதனை நடத்​தினர்.

தெலங்​கானா மாநிலம், மஹபூப் நகர் இணை போக்​கு​வரத்​துத் துறை ஆணை​ய​ராக பணி​யாற்றி வருபவர் எம். கிஷன். இவர் சட்​ட​விரோத​மாக பல கோடிக்கு சொத்து சேர்த்​துள்​ள​தாக லஞ்ச ஒழிப்​புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. அதன் பேரில் ஹைத​ரா​பாத் லஞ்ச ஒழிப்​புத் துறை டிஎஸ்பி தர் தலை​மை​யில் இத்​துறை அதி​காரி​கள், செகந்​தி​ரா​பாத் ராஜ​ராஜேஸ்​வரி நகரில் குடி​யிருக்​கும் போக்​கு​வரத்​துத் துறை இணை ஆணை​யர் எம். கிஷன் வீடு உட்பட மஹபூப் நகர், நிஜா​மா​பாத், சங்​காரெட்டி உள்ளிட்ட 11 இடங்​களில் ஒரே நேரத்​தில் சோதனை​யில் ஈடு​பட்டனர்.

சோதனை செய்ய எம். கிஷன் வீட்​டில் அதி​காரி​கள் நுழைந்​த​போது அவர் குளியலறை​யில் இருந்​துள்​ளார். அதி​காரி​கள் வந்​தது தெரிந்​ததும் அவர் சுமார் 1 மணி நேரம் கழித்து வெளியே வந்​தார். இதையடுத்​து, அவருடைய மற்​றும் அவரது வீட்​டில் உள்​ளவர்​களின் செல்​போன்​கள், பீரோக்​கள், அறை​கள் என அனைத்​தும் தீவிர சோதனைக்கு உட்​படுத்​தப்​பட்​டன. இந்த சோதனை​யில் மொத்​தம் ரூ.12.72 கோடி மதிப்​புள்ள அசையா மற்​றும் அசை​யும் சொத்து விவரங்​கள் கிடைத்​தன. இவற்​றின் சந்தை மதிப்பு ரூ.100 கோடிக்​கும் அதி​கம் என தெரிய​வந்​தது.

நிஜா​மா​பாத்​தில் உள்ள ஒரு பிரபல ஓட்​டலில் கிஷனுக்கு 50% பங்கு உள்​ளது. இதையடுத்​து, அந்த ஓட்​டலுக்கு சீல் வைக்​கப்​பட்​டது. நிஜா​மா​பாத்​தில் 3000 ச.அடி​யில் பர்​னீச்​சர் கடை, அஷோகா டவுன்​ஷிப்​பில் 2 வீடு​கள், சங்​காரெட்​டி​யில் 31 ஏக்​கர் விவ​சாய நிலம் உள்​ளிட்​டவை இருப்​பது தெரிய​வந்​துள்​ளது.

இதையடுத்​து, வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து சேர்த்​த​தாக கிஷனை அதி​காரி​கள் கைது செய்​து, நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தினர். அவரை 14 நாட்​கள் நீதி​மன்​ற ​காவலில்​ வைக்​க நீதிபதி உத்​தர​விட்​ட​தால்​ சிறை​யில்​ அடைக்​கப்​பட்​​டார்​.

SCROLL FOR NEXT