இந்தியா

ஆர்.ஜி.கர் மருத்துவர் கொலை வழக்கு: புதிய விசாரணைக்கு சுவேந்து உத்தரவு

செய்திப்பிரிவு

கொல்கத்தா: நாடு முழு​வதை​யும் உலுக்​கிய கொல்​கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்​றும் கொலை வழக்கு தொடர்​பாக புதிய விசாரணை நடத்த மேற்கு வங்க முதல்​வர் சுவேந்து அதி​காரி நேற்று உத்​தர​விட்​டார்.

கடந்த 2024-ம் ஆண்டு நடை​பெற்ற இக்​கொடூரச் சம்​பவத்​தில் உயிரிழந்த பெண் பயிற்சி மருத்​து​வரின் தாயாரும், தற்​போதைய பாஜக சட்​டப்​பேரவை உறுப்​பினரு​மான ரத்னா தேப்​நாத், இக்கொலை தொடர்​பாக மீண்​டும் விசா​ரணை நடத்​தக் கோரி முதல்வர் சுவேந்து அதி​காரி​யிடம் கோரிக்கை விடுத்​திருந்​தார்.

இக்​கோரிக்​கை​யைத் தொடர்ந்​து, மாநில தலை​மைச் செய​லா​ளர் மற்​றும் துறை சார்ந்த நிபுணர் குழு​வினருடன் விரி​வான ஆலோசனை மேற்​கொண்ட முதல்​வர், இச்​சம்​பவம் குறித்து சிறப்பு ஆணை​யச் சட்​டம் 1952-ன் கீழ் புதிய விசா​ரணை முறைப்படி தொடங்​கப்​படும் என அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்துள்​ளார்.

மேலும், காவல் துறை​யினர் கடமை தவறிய​தாகச் சுட்​டிக்​காட்​டிய அவர், அந்​தப் பெண்​ணின் உடல் தகனத்​தில் நிகழ்ந்த முறை​கேடு​கள் குறித்து தனி​யாக விசா​ரித்து தொடர்புடைய​வர்​கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்​டுள்​ளார்​.

SCROLL FOR NEXT