இந்தியா

ஒரே தலைநகராக அமராவதியை அங்கீகரிக்க சட்டப்பூர்வ பாதுகாப்பு கோரும் தீர்மானம்: ஆந்திர சட்டப் பேரவையில் நிறைவேறியது

என்.மகேஷ்குமார்

அமராவதி: ஆந்​தி​ரா​வின் ஒரே தலைநகர​மாக அமராவ​திக்கு சட்​டப்​பூர்வ பாது​காப்பு வழங்க மத்​திய அரசுக்கு கோரிக்கை விடுக்​கும் தீர்​மானம் மாநில சட்​டப்​பேர​வை​யில் நேற்று நிறைவேறியது.

ஆந்​திர சட்​டப்​பேர​வை​யின் சிறப்​புக் கூட்​டம் நேற்று அமராவ​தி​யில் நடை​பெற்​றது. இதில், ஆந்​தி​ரா​வின் ஒரே தலைநகர​மாக அமராவ​திக்கு சட்​டப்​பூர்​வப் பாது​காப்பு வழங்க மத்​திய அரசுக்கு கோரிக்கை விடுக்​கும் தீர்​மானத்​தின் மீது விவாதம் நடை​பெற்​றது. இதில் முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு பேசுகை​யில், “2014-ம் ஆண்டு ஆந்​திரப் பிரதேச மறுசீரமைப்பு சட்​டத்​தில் திருத்​தங்​கள் மேற்​கொள்​வதன் மூலமே, ஒரே தலைநகர​மாக அமராவ​திக்கு நிரந்தர சட்​டப் பாது​காப்​புப் பெற முடி​யும்’’ என்​றார்.

          

இந்த தீர்​மானத்​துக்கு உறுப்​பினர்​கள் அனை​வரும் ஆதரவு தெரி​வித்​தனர். இதையடுத்து இந்த தீர்​மானம் ஒரு​மன​தாக நிறைவேற்​றப்​பட்​ட​தாக சபா​நாயகர் அய்​யண்ண பாத்​ருடு அறி​வித்​தார். விரை​வில் இந்த தீர்​மானம் மத்​திய அரசுக்கு அனுப்பி வைக்​கப்பட உள்​ளது.

தீர்மானத்தின் பின்னணி: ஆந்​திர பிரதேசம் கடந்த 2014-ல் 2 ஆக பிரிக்​கப்​பட்​டது. இதன்படி, தெலங்​கானா தனி மாநிலம் உரு​வாக்​கப்​பட்​டது. அதன் தலைநகராக ஹைத​ரா​பாத் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஆந்​தி​ரா​வில் ஆட்சி அமைத்த சந்​திர​பாபு நாயுடு, அமராவதி தலைநகர திட்​டத்தை தொடங்​கி​னார். இதற்​காக நிலங்​கள் கையகப்​படுத்​தி, கட்​டு​மானப் பணி​கள் முழு வீச்​சில் நடை​பெற்​றன. எனினும் 2019-ல் ஆட்​சிக்கு வந்த ஜெகன் மோகன் ரெட்டி இதை ஏற்​காமல் 3 தலைநகர திட்​டத்தை அறி​வித்​தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்​பியது.

இதையடுத்து 2024-ல் மீண்​டும் ஆட்​சிக்கு வந்த சந்​திர​பாபு நாயுடு, அமராவதி மட்​டுமே ஆந்​தி​ரா​வின் தலைநகர​மாக இருக்​கும் என அறி​வித்​தார். இதன் அடிப்​படை​யில் இந்த தீர்​மானத்தை சட்​டப்​பேர​வை​யில்​ நிறைவேற்​றி உள்​ளார்​.

SCROLL FOR NEXT