மீனாட்சி நடராஜன்

 
இந்தியா

மீனாட்சி நடராஜன் வேட்பு மனு நிராகரிப்பு: தேர்தல் ஆணையத்தில் காங். புகார்

செய்திப்பிரிவு

போபால்: மத்​திய பிரதேச மாநிலத்​தில் காலி​யாக உள்ள 3 மாநிலங்​களவை இடங்​களுக்கு தேர்​தல் அறிவிக்​கப்​பட்​டது. இதில், ஆளும் பாஜக 2 இடத்​தி​லும் காங்​கிரஸ் ஓரிடத்​தி​லும் எளி​தாக வெல்ல முடி​யும் என்ற நிலை இருந்​தது.

ஆனால் பாஜக பொதுச் செய​லா​ளர் தருண் சக், மாநில செயலாளர் ரஜ்னீஷ் அகர்​வால் ஆகியோர் வேட்​பாளர்​களாக அறிவிக்​கப்​பட்டு இருந்​தனர். பாஜக​விடம் 48 வாக்​கு​கள் உபரி​யாக இருப்​ப​தால் 3-வது வேட்​பாள​ராக மகேஷ் கெவத் அறிவிக்கப்பட்டார்.

அதே​ நேரத்​தில், காங்​கிரஸ் சார்​பில் தமிழகத்தைப் பூர்​வீக​மாகக் கொண்ட மீனாட்சி நடராஜன் வேட்பு மனு தாக்​கல் செய்​திருந்​தார். ஆனால், ஹைத​ரா​பாத் நீதிமன்றத்தில் அவர் மீது நிலு​வை​யில் உள்ள குற்ற வழக்கு பற்றி வேட்​பு மனு​வில் குறிப்​பிடப்​ப​டாத​தால் மீனாட்சி நடராஜனின் வேட்பு மனு நிராகரிக்​கப்​படு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், காங்​கிரஸ் கட்​சி​யின் மூத்த தலை​வர்​கள் தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் மற்​றும் தேர்​தல் ஆணை​யர்​களை நேற்று சந்​தித்​தனர். அப்​போது, "மீ​னாட்சி நடராஜன் மீது நீதி​மன்​றம் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​காத நிலையில் அவரது மனு நிராகரிக்​கப்​பட்​டுள்​ளது. அவருடைய மனுவை ஏற்​கு​மாறு தேர்​தல் அதி​காரிக்கு உத்​தர​விட வேண்​டும்​" என கோரிக்​கை மனு அளித்​தனர்​.

SCROLL FOR NEXT