மாதிரி படம்

 
இந்தியா

உ.பி.யில் வழியனுப்ப வந்து ‘வந்தே பாரத்’ ரயிலில் 140 கி.மீ. பயணம் செய்த 12 பேர்

தலா ரூ.3,000 அபராதம் விதித்த ரயில்வே துறை

செய்திப்பிரிவு

இட்டாவா(உ.பி.): உத்தர பிரதேசத்தில் உறவினர்களை வழியனுப்புவதற்காக சென்றவர்கள் வந்தே பாரத் விரைவு ரயிலில் 140 கிலோ மீட்டர் தூரம் பயணித்த 12 பேருக்கு ரயில்வே நிர்வாகம் ரூ.36,000 அபராதம் விதித்து உள்ளது.

வாராணசி - புதுடெல்லி வந்தே பாரத் விரைவு ரயில் (வண்டி எண்: 22415) ஞாயிற்​றுக்​கிழமை காலை கான்​பூர் சென்ட்​ரல் ரயில் நிலையத்​துக்கு வந்​தது. கான்​பூரின் பல்​வேறு பகுதி​களைச் சேர்ந்த 12 பேர், ரயி​லில் பயணம் செய்​ய​விருந்த தங்​களது குடும்​பத்​தினரின் உடைமை​களை வைத்து, அவர்​களை இருக்​கைகளில் அமர வைப்​ப​தற்​காக ரயிலுக்​குள் ஏறியுள்​ளனர்.

உறவினர்​கள் அதிர்ச்சி

அப்​போது அவர்​கள் உள்ளே இருந்​த​போதே, புறப்​படும் நேரம் நெருங்​கிய​தால் ரயி​லின் தானியங்கி கதவு​கள் தானாகவே மூடிக்​கொண்​டன. அடுத்த ரயில் நிலை​யம் வரும் வரை இக்​கதவு​கள் திறக்​காது என்​ப​தால், பெண்​கள் மற்​றும் குழந்​தைகள் உட்​பட அந்த 12 பேரும் ரயிலுக்​குள்​ளேயே சிக்​கிக்​கொண்​டனர். ரயில் புறப்​பட்​டுச் சென்​றதைக் கண்டு நடைமேடை​யில் நின்​றிருந்த மற்ற உறவினர்​கள் அதிர்ச்சி அடைந்​தனர்.

ரயிலுக்​குள் சிக்​கிய​வர்​கள் உடனடி​யாகக் கதவு​களைத் திறக்குமாறு ரயில்வே ஊழியர்​களிடம் முறை​யிட்டு வாக்​கு வாதத்தில் ஈடு​பட்​டனர். ஆனால், ஓடும் ரயி​லில் பாது​காப்பு விதிகள் மற்​றும் தொழில்​நுட்​பக் கட்​டுப்​பாடுகள் காரண​மாகக் கதவு​களைத் திறக்க முடி​யாது என ஊழியர்​கள் கைவி​ரித்​தனர். பின்​னர் இது​குறித்து துண்ட்லா ரயில்வே கட்​டுப்​பாட்டு அறைக்குத் தகவல் தெரி​விக்​கப்​பட்​டது. கட்​டுப்​பாட்டு அறை​யின் உத்​தரவைத் தொடர்ந்து, கான்​பூரி​லிருந்து சுமார் 140 கிலோ மீட்டர் தொலை​வில் உள்ள இட்​டாவா சந்​திப்​பில் காலை 10.49 மணி​யளவில் வந்தே பாரத் ரயில் நிறுத்​தப்​பட்​டது.

அங்கு தயாராக இருந்த இட்​டாவா நிலைய கண்​காணிப்​பாளர் பி.எம். மீனா, ரயில்வே பாது​காப்​புப் படை ஆய்​வாளர் தினேஷ் குமார் சிங் மற்​றும் ரயில்வே காவல் துறை ஆய்​வாளர் யது​வீர் சிங் ஆகியோர் அடங்​கிய குழு​வினர் 12 பேரை​யும் பத்​திர​மாக ரயி​லில் இருந்து கீழே இறக்​கினர். அதன் பின்​னர் ஆர்.பி.எஃப். காவல் நிலை​யத்​துக்கு அழைத்​துச் செல்​லப்​பட்ட அவர்​களிடம் ரயில்வே அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தினர்.

முறை​யான பயணச்​சீட்டோ, அனுமதியோ இன்றி ரயிலுக்​குள் ஏறி விதி​மீறலில் ஈடு​பட்​டதற்​காக, வணிகப் பிரிவு அதி​காரி​கள் நபர் ஒரு​வருக்கு தலா ரூ.3,000 வீதம் மொத்​தம் ரூ.36,000 அபராதம் வசூலித்​தனர். எதிர்​காலத்​தில் இதுபோன்று அனுமதி​யின்றி ரயில்களில் ஏறக் கூடாது என எச்​சரிக்​கப்​பட்டு அவர்​கள் விடுவிக்கப்​பட்​டனர்.

ரயில் ஏறக்கூடாது

வந்தே பாரத் போன்ற நவீன ரயில்​களில் பயணம் செய்​யும்​போது, வழியனுப்ப வருபவர்​கள் ரயிலுக்​குள் ஏறு​வதைத் தவிர்த்து நடைமேடை​யிலேயே நிற்க வேண்​டும் என்​பதை இச்​சம்​பவம் மீண்​டும் ஒரு​முறை பொது​மக்​களுக்கு உணர்த்​தி​யுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT