இந்தியா

மேற்கு வங்க நிலக்கரி ஊழல் வழக்கு: ஐ-பேக் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மேற்கு வங்க நிலக்​கரி ஊழல் வழக்​கில், தேர்​தல் வியூ​கம் வகுத்து தரும் ஐ-பேக் நிறு​வனத்​தின் நிர்​வாகி​கள் தொடர்புடைய இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று சோதனை நடத்​தினர்.

பெங்​களூரு, ஹைத​ரா​பாத் மற்​றும் டெல்​லி​யில் பல்​வேறு இடங்களில் இந்த சோதனை நடை​பெற்​றது. சோதனை நடைபெற்ற இடங்​களில் ஐ-பேக் இணை நிறு​வனர் மற்​றும் இயக்குநர் ரிஷி ராஜ் சிங்​கின் வீடும் அடங்​கும் என அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

          

நிலக்​கரி ஊழல் தொடர்​புடைய சட்​ட​விரோத பணப் பரிவர்த்தனை வழக்​கில் கொல்​கத்​தா​வில் உள்ள ஐ.பேக் நிறுவனத்​தின் அலு​வல​கம் மற்​றும் அதன் நிறு​வனரும் இயக்குநர்களில் ஒரு​வரு​மான பிரதீக் ஜெயின் வீட்​டில் அமலாக்கத்துறை அதி​காரி​கள் கடந்த ஜனவரி​யில் சோதனை நடத்​தினர். திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சிக்கு ஐ-பேக் நிறு​வனம் அரசி​யல் வியூ​கம் வகுத்து வந்த நிலை​யில் இந்த சோதனைக்கு முதல்​வர் மம்தா கடும் எதிர்ப்பு தெரி​வித்​திருந்​தார்.

சமீபத்​தில் பிரதீக் ஜெயின், ரிஷி ராஜ் சிங் ஆகியோ​ருக்கு அமலாக்​கத்​ துறை சம்​மன் அனுப்​பியது. நிலக்​கரி வழக்​கில் நேரில் ஆஜராகி வாக்​கு மூலம் பதிவு செய்​யு​மாறு அதில் கூறியிருந்​தது. இந்த சம்​மனை ரத்து செய்​யக் கோரி இவர்​கள் டெல்லி உயர் நீதிமன்​றத்தை அணுகி​யுள்​ளனர். மேற்கு வங்​கம் மற்​றும் தமிழ்நாட்டில் தேர்​தல் பணி​கள் நடை​பெற்று வரு​வதை அவர்​கள் தங்​கள் மனு​வில் சுட்​டிக்​ காட்​டி​யுள்​ளனர். இந்​நிலை​யில் இந்த சோதனை நடை​பெற்​றுள்​ளது.

இது குறித்து திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் மூத்த தலை​வர் குனால் கோஷ் கூறுகை​யில், “மேற்கு வங்​கத்​தில் திரிண​மூல் காங்கிரஸின் தேர்​தல் பிரச்​சா​ரங்​களை திசை திருப்​பும் முயற்சியாக இந்த சோதனை நடத்​தப்​பட்​டுள்​ளது. மிக​வும் முக்கிய​மான இத்​தருணத்​தில், மத்​திய அமைப்​பு​கள் மூலம் எங்களுக்கு இடையூறுகள் ஏற்​படுத்த பாஜக முயன்று வரு​கிறது.

தேர்​தலில் எங்களுக்கு மக்​கள் வழங்​கும் ஆணையை கண்டு பாஜக நிலைகுலைந்து போகும். எங்​கள் கட்​சியை துன்புறுத்துவதற்​காக இத்​தகைய இழி​வான தந்​திரங்​களை எந்த அளவு அவர்​கள் கையாளுகிறார்​களோ, அந்த அளவுக்கு வங்​காள மக்​களிட​ம் இருந்து அவர்​கள் அந்​நியப்​பட்​டுப்​ போ​வார்​கள்” என்றார்​.

SCROLL FOR NEXT