இந்தியா

ரஷ்ய அதிபரின் விருந்தில் ராகுல், கார்கேவுக்கு அழைப்பில்லை: சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி விமர்சனம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​தியா வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்​கு, குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு சார்​பில் விருந்து அளிக்​கப்​பட்​டது. இந்த விருந்​தில் காங்​கிரஸ் மூத்த தலை​வர்​கள் கார்​கே, ராகுல் காந்தி ஆகியோ​ருக்கு அழைப்பு விடுக்​கப்​பட​வில்​லை. அதே​நேரத்​தில் முன்​னாள் மத்​திய அமைச்​சர் சசி தரூருக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டிருந்​தது.

இதுதொடர்​பாக சிவசேனா (உத்​தவ்) எம்​.பி. பிரி​யங்கா சதுர்​வேதி தனது எக்ஸ் பக்​கத்​தில் கூறிய​தாவது: இது அற்​ப​மான செயல். குடியரசுத் தலை​வர் பதவி என்​பது எந்த அரசி​யல் கட்​சி​யுட​னும் தொடர்​புடையது அல்ல. கட்சி சாராதது ஆகும். அனைத்து கட்​சி​யினரை​யும் சமமாக நடத்​த வேண்​டும்.

அனைத்​துக் கட்​சித் தலை​வர்​களை​யும் குடியரசுத் தலை​வர் அழைத்​திருக்க வேண்​டும்​. ஆளுங்​கட்​சித் தரப்பு மட்​டுமே அழைக்​கப்​பட்​டது மிக​வும் அற்​ப​மானது. இவ்​வாறு அவர்​ கூறி​யுளளார்​.

SCROLL FOR NEXT