புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நவம்பர் 26-ம் தேதி மணிப்பூருக்கு சென்று இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க உள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி மற்றும் குகி-சோ சமூகத்தினரிடையே கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ம் தேதி இனக்கலவரம் வெடித்தது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மோதல் தொடர்கிறது. இது தொடர்பான வன்முறைக்கு இதுவரை 306 பேர் உயிரிழந்துள்ளனர்.
49 பேரை காணவில்லை. சுமார் 7,900 வீடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதுடன் 2,600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். இந்நிலையில், வரும் 26-ம் தேதி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.