இந்தியா

ராகுல் - மாணவர்கள் சந்திப்பு அரசியல் காமெடி: தேவேந்திர பட்னாவிஸ் விமர்சனம்

செய்திப்பிரிவு

மும்பை: ம​கா​ராஷ்டிர மாநிலம் புனே​யில் ‘சத்​ரோன் கி கூஞ்ச்’ (மாணவர்​களின் குரல்) என்ற கலந்​துரை​யாடல் நிகழ்ச்​சி ​சனிக்கிழமை நடை​பெற்றது.

இதில் பேசிய ராகுல் காந்​தி, மனுஸ்​மிருதி மனநிலை​யை கடுமையாகச் சாடி​னார். அத்​துடன் “ஆணா​திக்க சிந்​தனையைத் தகர்க்க வேண்​டும்” என்று பெண்​களுக்கு அழைப்பு விடுத்​ததுடன், ஜந்​தர் மந்​தரில் போராட்​டம் நடத்​திய பெண் விளை​யாட்டு வீரர்கள் குறித்து பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்த கருத்துகளை​யும் விமர்​சித்​திருந்​தார்.

இதுகுறித்து மகாராஷ்டிர முதல்​வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகை​யில், “புனே​யில் நடை​பெற்ற மாணவர் சந்​திப்பு நிகழ்ச்சியில் காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி பேசி​யது அரசி​யல் காமெடி​யாகி உள்​ளது.

நாடாளு​மன்​றத்​தில் மகளிருக்​கான இடஒதுக்​கீடு மசோ​தாவை எதிர்த்​து​விட்​டு, வெளியே வந்து மகளிர் அதி​காரம் பற்​றிப் பேசுவது ராகுல் காந்​தி​யின் போலித்​தன​மான நிலைப்​பாட்​டையே காட்​டு​கிறது. தொலைக்​காட்​சிகளில் மட்​டுமே தங்​களைத் தக்​க​வைத்​துக்​கொள்​ளத் துடிக்​கும், திசையற்ற மற்​றும் வெற்று ஆரவாரம் செய்​யும் கட்​சி​யாக காங்​கிரஸ் மாறி​யுள்​ளது” என்​றார்.

தூக்கம் தொலைத்த பாஜக...

காங்​கிரஸ் தேசி​யச் செய​லா​ளர் சச்​சின் சாவந்த் கூறுகை​யில், “மகா​ராஷ்டிர அரசு போக்​கு​வரத்​துத் தடைகளும், பிற கெடு​பிடிகளும் விதித்​த​போ​தி​லும், ராகுல் காந்தி அந்த நிகழ்ச்​சி​யில் கலந்து கொண்​டார். அதற்கு முன்​னெப்​போதும் இல்​லாத வகையிலான மக்​களின் ஆதர​வு கிடைத்ததைக் கண்​டு பாஜக தூக்​கத்​தை தொலைத்​துள்​ளது” என்​றார்​.

SCROLL FOR NEXT