இந்தியா

இடதுசாரிகளிடம் காணாமல் போன இடதுசாரி கொள்கைகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

ஆலப்புழா: கேரளா​வில் ஏப்​.9-ம் தேதி சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதையொட்டி ஆலப்​புழா​வில் காங்​கிரஸ் சார்​பில் நேற்று நடை​பெற்ற தேர்​தல் பிரச்​சா​ரப் பொதுக்​கூட்​டத்​தில் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி பேசி​ய​தாவது: இன்று பாஜக, ஆர்​எஸ்​எஸ் மற்​றும் ஆளும் இடது​சாரி முன்​னணிக்கு இடையே ஒரு தொடர்பு இருப்​பதை அனை​வரும் பார்க்க முடிகிறது.

ஆளும் இடது​சாரி ஜனநாயக முன்​னணி​யில் (எல்​டிஎப்) சந்​தர்ப்​ப​வா​தி​கள் அல்​லாத, பல ஆண்​டு​களாக அந்த சித்​தாந்​தத்​துக்​காக உழைத்த தலை​வர்​கள் இருக்​கின்​றனர். அவர்​கள் இன்று ஏமாற்​றப்​பட்​ட​தாக​வும், காயப்​படுத்​தப்​பட்​ட​தாக​வும், துரோகம் இழைக்​கப்​பட்​ட​தாக​வும் உணர்​கின்​றனர். காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி (யுடிஎப்) முன்பு எல்​டிஎப்-ஐ ஒரு சித்​தாந்த ரீதி​யான எதிரி​யாக எதிர்​கொண்​டது. ஆனால் இப்​போது அந்த முன்​னணி மாறி​விட்​டது.

          

எல்​டிஎப் என்​றால் என்ன? இடது​சாரி ஜனநாயக முன்​னணி. இப்​போது, உண்​மை​யைச் சொல்​லப்​போ​னால், எல்​டிஎப்​-ல் 'இடது​சா​ரி' என்று சொல்​லிக் கொள்ள எது​வுமே இல்​லை. இந்​தத் தேர்​தலுக்​குப் பிறகு, அதில் எது​வுமே மிஞ்​சப் போவ​தில்​லை. மேலும், ஒரு 'மறை​முகக் கை' எல்​டிஎப்-ஐ வழிநடத்​துகிறது. அந்த மறை​முகக் கை வகுப்​பு​வாதத்தை ஊக்​கு​விப்​பது; அது இந்​திய அரசி​யலமைப்பை ஏற்​ப​தில்​லை, மக்​களைப் பிரிக்​கிறது மற்​றும் வெறுப்​பைப் பரப்​பு​கிறது. பாஜக, ஆர்​எஸ்​எஸ் மற்​றும் சிபிஐ (எம்) இடையே​யான தொடர்பை கேரளா​வில் உள்ள அனை​வரும் பார்க்க முடி​யும்.

மற்ற மாநிலங்​களில் மதம் மற்​றும் கோயில்​களைப் பற்​றிப் பேசும் பிரதமர் மோடி, சபரிமலை தங்​கம் திருடு போன விவ​காரம் போன்ற கேரளா​வின் பிரச்​சினை​களில் மவுனம் காக்​கிறார். நான் பாஜக மற்​றும் ஆர்​எஸ்​எஸ்-ஐ எதிர்த்​துப் போராடு​கிறேன்.

அவர்​கள் என்னை விமர்​சிக்​கின்​றனர், வழக்​கு​கள் பதி​யப்​படு​கின்​றன. நான் விசா​ரணைக்கு உட்​படுத்​தப்​படு​கிறேன். ஆனால் நான் பின்​வாங்க மாட்​டேன். மோடி தின​மும் என்​னைத் தாக்கி பேசுகிறார். ஆனால் அவர் ஏன் கேரள முதல்​வரையோ அல்​லது அவரது குடும்​பத்​தினரையோ தாக்​கிப் பேசுவ​தில்​லை?

பிரதமர் மோடி கேரளா​வுக்கு வரும்​போது, அதையெல்​லாம் மறந்து விடு​கிறார். ஏனெனில் அவர் எல்​டிஎப்​-க்கு உதவ விரும்​பு​கிறார். உண்மை என்​னவென்​றால், தேசிய அளவில் எல்​டிஎப் ஒரு​போதும் பாஜக​வுக்கு சவாலாக உரு​வெடுக்​காது என்​பது அவருக்​குத்​ தெரி​யும்​. இவ்​வாறு ராகுல்​ காந்​தி பேசி​னார்​.

SCROLL FOR NEXT