ராகுல் காந்தி

 
இந்தியா

“என்னுடன் நேருக்கு நேர் விவாதித்தால் மோடியால் பிரதமராக தொடர முடியாது” - ராகுல் காந்தி

தமிழினி

புதுடெல்லி: பிரதமர் மோடியுடன் தான் நேருக்கு நேர் விவாதித்தால் அவரால் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீண்டும் சவால் விடுத்துள்ளார்.

இது குறித்து இன்ஸ்டாகிராமில் கேள்வி-பதில் அமர்வின்போது, “நாடாளுமன்றத்தில் விவசாயச் சட்டங்கள், சீனா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேசும்போது எனது மைக் அணைக்கப்படுகிறது, தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்படுகிறது.

நீண்ட நேர விவாதங்கள் தேவையில்லை. ஒரு மேஜையின் ஒரு புறத்தில் பிரதமர் மோடியும், மறுபுறம் நானும் நேருக்கு நேர் அமர்ந்து மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் விவாதம் மட்டுமே வேண்டும்.

இந்த விவாதத்துக்கு அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி அல்லது ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் யாரை நடுவராக நியமித்தாலும் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. என்னுடனான இந்த நேருக்கு நேர் விவாதத்திற்குப் பிறகு பிரதமர் மோடியால் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியாது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் இந்த சவாலை பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனைத்து வாய்ப்புகளும் உள்ள நிலையில், விவாதங்களில் இருந்து ராகுல் காந்தியே ஓடி ஒளிந்து கொண்டிருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "விவாதத்திற்கு வேறு இடத்தை தேடும் ராகுல் காந்தி, ஏற்கனவே அதற்குரிய சரியான இடம் நாடாளுமன்றத்தில்தான் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ராகுல் காந்தி, இது போன்ற சவால்களை விடுத்துவிட்டு சற்று தீவிரத்தன்மையோடும் பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT