இந்தியா

விக்ராந்த் கப்பலில் முதல் முறையாக தரையிறங்கிய ரஃபேல் விமானம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​தி​யாவின் உள்​நாட்​டுத் தயாரிப்பு விமானம் தாங்கிக் கப்​பலான ஐஎன்எஸ் விக்ராந்​தில் ரஃபேல் மரைன் போர் விமானம் அக்​டோபர் 29-ம் தேதி முதல்​முறை​யாகத் தரையிறங்கியது.

முதல் முயற்​சி​யிலேயே இந்​தத் தரையிறக்​கம் வெற்​றிகர​மாக முடிந்​தது.கடற்​படை​யின் விமானம் தாங்​கிக் கப்​பல் செயல்​பாடுகளில் இந்த விமானத்தை இணைப்​ப​தற்​கான முக்​கிய முன்னேற்​றமாக இது பார்க்​கப்​படு​கிறது.

63,000 கோடியில் ஒப்பந்தம்

கடற்​படைக்​காக 26 ரஃபேல் விமானங்​களை வாங்க, 2025 ஏப்​ரல் 28-ம் தேதி பிரான்​ஸுடன் இந்​தியா சுமார் ரூ 63,000 கோடி மதிப்​பிலான ஒப்​பந்​தத்தில் கையெழுத்​திட்​டது. உள்​நாட்டு ஆயுதங்​களை விமானத்​தில் இணைக்​கத் தொழில்நுட்பப் பரிமாற்​றமும் ஒப்​பந்​தத்​தில் உள்​ளது.

மேலும், இந்தி​யாவில் ரஃபேல் விமான உடற்​பகுதி தயாரிப்பு வசதி​களும், என்​ஜின், சென்​சார்​கள், ஆயுதங்​கள் ஆகிய​வற்​றுக்​கான பராமரிப்பு, பழுதுபார்ப்பு, முழுச் சீரமைப்பு வசதி​களும் அமைக்கப்​படும்.

ரஃபேல் மரைன் விமானங்​கள் கடற்​படை​யின் வான்​வலிமையை உயர்த்​தும். வான் பாது​காப்​புக்​கும், கடலிலும் தரையிலும் உள்ள இலக்​கு​களைத் தாக்​கவும் இவை உதவும். தற்​போது இவற்றை இயக்​கு​வது பிரான்ஸ் கடற்​படை மட்​டுமே.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT