சண்டிகர்: ஆம் ஆத்மியைச் சேர்ந்த ராகவ் சத்தா, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட 7 மாநிலங்களவை எம்.பி.க்கள் அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.
இந்நிலையில், ஜலந்தரில் உள்ள ஹர்பஜன் சிங்கின் வீட்டில் பாதுகாப்புப் பணியில் இருந்த பஞ்சாப் மாநில போலீஸார் நேற்று முன்தினம் விலக்கிக் கொள்ளப்பட்டனர். மாநில போலீஸாரின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட மறுநாளே (நேற்று) மத்திய அரசின் சிஆர்பிஎப் படையினர் ஹர்பஜன் சிங் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங்குக்கு மத்திய அரசின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தினந்தோறும் அவரது வீட்டுக்கு 9 முதல் 10 சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். இதனிடையே, கட்சித் தாவிய எம்.பி.க்களை துரோகிகள் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.