இந்தியா

பஞ்சாபின் 3 புனித தலங்களில் மதுபானம், இறைச்சிக்கு தடை

செய்திப்பிரிவு

சண்டிகர்: பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் சீக்கியர்களின் புகழ்பெற்ற புனிதத்தலமான பொற்கோயில் அமைந்துள்ளது. இதேபோல பஞ்சாபின் தல்வண்டி சபோ நகரில் தக்த் ஸ்ரீ தம்டமா சாஹிப் என்ற குருத் வாரா அமைந்திருக்கிறது.

பஞ்சாபின் அனந்தபூரில் குரு தேக் பகதூர் கட்டிய வரலாற்று சிறப்புமிக்க குருத்வாரா உள்ளது. இந்த 3 புனிதத் தலங்களில் இறைச்சி, மதுபானம், புகையிலை பொருட்கள், போதைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் நேற்று கூறியதாவது: சீக்கியர்களின் 5 புனிதத் தலங்களில் 3 புனிதத் தலங்கள் பஞ்சாபில் அமைந்துள்ளன. இந்த புனிதத் தலங்களில் இறைச்சி, மதுபானம் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை உத்தரவு மிகுந்த கண்டிப்புடன் அமல்படுத் தப்படும்.

உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் 3 புனிதத் தலங்களுக்கும் வருகை தருகின்றனர். அவர்களின் வசதிக்காக அமிர்தசரஸ், தல்வண்டி சபோ, அனந்தபூரில் போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படும். இந்த நகரங்களின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பஞ்சாப் அரசின் உத்தரவின் மூலம் 3 நகரங்களுக்கும் சட்டப்பூர்வமாக புனிதத் தலம் அந்தஸ்து வழங்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு முதல்வர் பகவந்த் சிங் மான் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT