இந்தியா

காமேனி மரணத்துக்கு எதிரான போராட்டங்கள்: ஸ்ரீநகர் லால் சவுக் பகுதிக்கு ‘சீல்’

செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ஈ​ரான் தலை​வர் காமேனி மரணத்​துக்கு எதி​ரான போராட்​டங்​கள் காரண​மாக ஸ்ரீநகரின் லால் சவுக் பகு​திக்கு நேற்று 'சீல்' வைக்​கப்​பட்​டது.

ஈரானில் அமெரிக்​கா, இஸ்​ரேல் நடத்​திய தாக்​குதலில் ஈரானின் உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி காமேனி கொல்​லப்​பட்​டார். இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து காஷ்மீரின் பல்​வேறு மத மற்​றும் சமூக அமைப்​பு​கள் நேற்று முழு அடைப்பு போராட்​டத்​துக்கு அழைப்பு விடுத்​தன. இதற்கு மக்​கள் ஜனநாயக கட்​சி​யின் தலைவர் மெகபூபா முப்தி ஆதரவு தெரி​வித்​தார்.

          

இந்​நிலை​யில் காஷ்மீர் பள்​ளத்​தாக்கு முழு​வதும் நேற்று போராட்டங்​கள் நடை​பெற்​றன. ஸ்ரீநகரில் உள்ள ஐ.நா. ராணுவ பார்​வை​யாளர்​கள் குழு தலை​மையகத்​தின் முன் ஏராள​மான மக்கள் கூடி, அமெரிக்​கா, இஸ்​ரேல் மற்​றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதி​ராக கோஷங்​களை எழுப்​பினர். இந்​தப் போராட்டங்​கள் மேலும் பரவாமல் தடுக்க ஸ்ரீநகர் மற்​றும் காஷ்மீரின் பல பகு​தி​களில் நேற்று கட்​டுப்​பாடு​கள் விதிக்கப்பட்டன.

போராட்​டங்​களின் மையப் பகு​தி​யான லால் சவுக் பகு​திக்கு ‘சீல்' வைக்​கப்​பட்​டது. மொபைல் இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்​டது. மேலும் காஷ்மீர் முழு​வதும் பள்​ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடு​முறை அறிவிக்​கப்​பட்​டது. இதற்கிடையில் மக்​கள் அமைதி காக்க வேண்​டும் என ஜம்​மு-​காஷ்மீர் முதல்​வர் உமர் அப்​துல்லா வேண்​டு​கோள் விடுத்துள்ளார். பல இடங்​களில் போலீஸ் மற்​றும் துணை ராணுவப் படை​யினர் குவிக்​கப்​பட்​டுள்​ளனர்.

SCROLL FOR NEXT