இந்தியா

அனுமதியின்றி போராட்டம் நடத்துவது சட்டவிரோதம்: உச்ச நீதிமன்றம் கருத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் கு​மார் பதவி விலக வலி​யுறுத்தி டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்​சி (சிஜேபி) சார்​பில் போராட்டம் அறிவிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், போராட்​டத்​துக்கு அனு​மதி வழங்​கக் கோரி​ உச்​ச நீதி மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்ட மனுக்​கள், தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது.

அனைத்து தரப்பு வாதத்தை கேட்ட பின்​னர் பேசிய நீதிப​தி​கள், அமை​தி​யான வழயில் போராட்​டம் நடத்த அனை​வருக்​கும் உரிமை உள்​ள​து. ஆனால் அனு​ம​தி​யின்றி போராட்​டம் நடத்​து​வது சட்​ட​ விரோதம். அதேவேளை​், மெட்ரோ ரயில் நிலை​யங்​கள் மூடப்​படு​வது பொது​மக்​களின் அன்​றாட வாழ்க்​கை​யைப் பாதிக்கும், இது கவலைக்​குரியது.

அனைத்​தை​யும் முடக்கி பொதுமக்​களுக்கு எந்​தப் போக்​கு​வரத்து வசதி​யும் இல்​லாமல் செய்​யக்​கூ​டாது. மெட்ரோ மற்​றும் பிற ரயில் சேவை​களை முறைப்​படுத்​தப்​பட்ட முறை​யில் இயக்​கு​வது குறித்து உரிய முடிவை எடுக்க வேண்​டும், நகரின் ஒரு சாலை முடக்​கப்​பட்​டால் மாற்​றுப் பாதை ஏற்​படுத்த வேண்​டும் என்று உத்​தர​விட்​டனர். மேலும் இந்த விவ​காரத்​தில் எடுக்​கப்​பட்ட நடவடிக்​கை​களின் விவரத்தை நீதி​மன்​றத்​தில் அறிக்​கை​யாக தாக்​கல்​ செய்​ய உத்​தர​விட்​டனர்​.

SCROLL FOR NEXT