இந்தியா

மற்றவர் உரிமையைப் பறிப்பதாக போராட்டம் அமையக் கூடாது: உச்ச நீதிமன்றம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் போராட்டங்களுக்காக ஒதுக்​கப்​பட்ட இடங்​களை கால​வரையின்றி ஆக்​கிரமிக்க முடி​யாது என்​றும், மற்றவர்​களின் உரிமை​களைப் பறிப்​ப​தாக அமையக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரி​வித்​துள்​ளது.

தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்குமார் பதவி வில​கக்​கோரி டெல்​லி​யில் நடை​பெற்ற போராட்​டங்​கள், தொடர்​பான மனுக்​கள் உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய் மால்யா பக் ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நீதிப​தி​கள், “ஒரு குழு​வினர் போராட்​டத்​துக்​காக ஒதுக்கப்​பட்ட இடத்​தைத் தொடர்ந்து ஆக்​கிரமித்​துக் கொண்​டால், மற்​றவர்​கள் எங்கே போராட்​டம் நடத்​து​வது? மேலும், விவசாயிகள், தொழிலா​ளர்​கள் உள்​ளிட்ட அனைவருக்​கும் போராட்​டம் நடத்த உரிமை உள்​ளது.

அதே நேரத்​தில், அன்​றாடம் கூலி வேலை செய்து பிழைக்​கும் தொழிலா​ளர்​களின் வாழ்வாதாரமும் பாதிக்​கப்​படக் கூடாது. போராட்​டம் நடத்​தும் இடங்​களை கால​வரையறை​யின்றி ஆக்​கிரமித்து மற்ற அமைப்புகளின் ஜனநாயக உரிமையைப் பறிக்​கக் கூடாது. போராட்​டங்​களுக்​கு் குறிப்​பிட்ட காலம் மட்​டுமே ஒதுக்​கப்​பட வேண்​டும்” என்​றனர்.

அப்​போது, “போராட்​டங்​களால் டெல்லி வணிகர்​களுக்கு சுமார் ரூ. 2 ஆயிரம் கோடி வரு​வாய் இழப்பு ஏற்​பட்​டுள்​ளது” என்று வணிகர்கள் தரப்​பில் தெரி​விக்​கப்​பட்​டது.

அதற்​குப் பதிலளித்த மத்​திய அரசு தரப்பு வழக்​கறிஞர், “ஒருநாள் போராட்​டத்​திற்கு அனுமதி வழங்​கப்​பட்ட நிலை​யில், போராட்​டக்​காரர்​கள் 17 நாட்கள் அங்கு் இருந்​தனர்” என்றார். அதற்கு நீதிப​தி​கள், “போராட்டம் நடத்​து​ம் உரிமையும், பொது​மக்​களின் வாழ்​வாதாரத்​தைப் பாது​காக்க வேண்​டிய அவ​சி​யமும் சமநிலை​யுடன் அணுகப்​பட வேண்​டும்” என்​றும் தெரி​வித்​தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT