புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் ராம்பூரில் முகமது அலி ஜவஹர் பல்கலைக்கழகம் உள்ளது. இது சிறையில் இருக்கும் சமாஜ்வாதி மூத்த தலைவர் ஆசம் கான் தலைவராக இருக்கும் முகமது அலி ஜவஹர் அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் 40 கட்டடங்களில் 38 கட்டிடங்களை இடிப்பதற்கான நோட்டீஸை ராம்பூர் மேம்பாட்டு ஆணையம் அளித்துள்ளது.
இதற்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், சமாஜ்வாதி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் இந்த நடவடிக்கை நியாயமற்றது, இந்த பல்கலைக்கழகம் குறிவைத்து தாக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளது.